Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு ஏப்ரல்-30 கடைசி வேலைநாள், 220 நாட்களுக்கு குறைவுபடும் நாட்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்; தொடக்கக்கல்வி இயக்குனர்

         நேற்று(17.04.2014)அன்று மதியம் 1.00 மணியளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி, Ex.MLC., தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு-உடன் மாநிலதுணைத்தலைவர் திரு கே.பி.ரக்‌ஷித்,தலைமை நிலைய செயலர் திரு க.சாந்தகுமார் மற்றும் போளூர் வட்டார பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

          அப்போது  இவ்வாண்டு ஜூன்.2013 மாதத்தில் 10ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதாலும், தேர்தல் வகுப்புகள் தேர்தல்பணிக்காக 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதாலும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 220 வேலைநாள் என்ற இலக்கு குறைவுபடுவதாகவும் அதற்காக பல இடங்களில்  உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் பள்ளி 220 வேலைநாட்கள் வரும் வரை மே மாதத்த்தில் 1 அல்லது 2 நாட்கள் பள்ளி திறக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இவ்வாண்டு 3 நாட்கள் CRC பயிற்சிநாட்கள் மற்றும் 3 நாட்கள் BRC அளவிலான பயிற்சி நாட்களில் 40% சதவீத ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் என்றும் அதற்கு ஈடாக 3 பள்ளி வேலை நாட்கள் தவிர்ப்பு(217+3=220)என ஆணை வழங்க வேண்டும் எனக்கோரப்பட்டது.


கடந்த காலத்தில் 10 பயிற்சி நாட்கள் வேலை நாட்களாக் அறிவிக்கப்பட்டிருந்த்ததை நினை வு கூறப்பட்டது அதற்கு இயக்குனர் ஏப்ரல்-30என்பதே தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு கடைசி வேலைநாள்.  அன்று வரை பள்ளிகள் நடத்தினால் போதுமானது.
யாரும் அதற்குபிறகு பள்ளிகள் நடத்தக்கூடாது. 220 நாட்களுக்கு குறைவு படும் நாட்கள் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அவ்வாறு கட்டயப்படுத்தப்பட்டால் தனக்கு தகவல் தெரிவிக்கவும் எனவும், இது குறித்து அனைத்து அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார் எனவே ஒன்றிரண்டு நாட்கள் குறைவாக இருந்தாலும் ஏப்ரல்-30 அன்றுடன் பள்ளிசெயல்பட்டால் போதுமானது.

தகவல் திரு கே.பி.ரக்‌ஷித்




2 Comments:

  1. தொடக்கக்கல்வி இயக்குனர் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  2. தொடக்கக்கல்வி இயக்குனர் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive