கடந்த மாதம், 20ம் தேதி நடந்த உயிரியல்
தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில், மூன்று கேள்விகள் தவறாக கேட்கப்பட்டன.
கேள்வி எண், 4ல், 'கீழ் உள்ளவற்றில் எது, 'இன்ஹிபிஷன்' என்ற ஹார்மோனை
சுரக்கிறது?' என, கேட்கப்பட்டது. 'இன்ஹிபிஷன்' என்பது, ஹார்மோன் சுரப்பியை
தடுத்து நிறுத்தக் கூடிய தயக்க உணர்வு.
இதையே, ஹார்மோன் என,
கேட்டது தவறு. கேள்வி எண், 9ல், 'நொதி' என்ற வார்த்தைக்குப் பதில்,
'அமிலம்' எனவும், 14வது கேள்விக்கான மூன்று விடைகளில், 'கோலி' என்பதற்குப்
பதில், 'கோவை' எனவும், கேட்கப்பட்டது. எனவே, இந்த, மூன்று கேள்விகளுக்கும்,
தலா ஒரு மதிப்பெண் வீதம், மூன்று மதிப்பெண் வழங்க வேண்டும் என,
ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இரு கேள்விக்கு மட்டும், 2
மதிப்பெண் வழங்கவும், 14வது கேள்வி விடையில், எழுத்துப்பிழை மட்டுமே
உள்ளது. இதற்காக, கருணை மதிப்பெண் வழங்க வேண்டாம் என, தேர்வுத்துறை
உத்தரவிட்டுள்ளதாக, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...