குழந்தைகளை பராமரிப்பதற்காக அரசு பெண் ஊழியர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகள்
விடுப்பு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி
வழங்கியது.
ககாலி கோஷ் என்ற அரசு பெண் ஊழியர் தனது மகனை மேல் நிலைத் தேர்வுக்கு
தயார் படுத்துவதற்காக 730 நாள்கள் விடுப்பு கேட்டார்.அவருக்கு அனுமதி
மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில்
முறையிட்டார். அவரது கோரிக்கையை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்று அனுமதி
அளித்தது. ஆனால் அந்தஅனுமதியை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து ககாலி கோஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யாய, வி.கோபால கெளடா ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பில், ""சட்டப்பிரிவு 43-சி யின் படி அரசு பெண்ஊழியர்களுக்கு 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் இருந்தால், அவர்கள்

தனது பணிக்காலத்துக்குள் 2 குழந்தைகள் வரை 2 ஆண்டுகள் (730 நாள்கள்) தொடர்ச்சியாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுப்பை அவர்கள்
குழந்தைகள் பராமரிப்புக்கு மட்டுமல்ல அவர்களின் மேற்படிப்பு மற்றும்
உடல்நலக்குறைவின்போதும் எடுத்துக்கொள்ளலாம்''என்று தீர்ப்பு அளித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...