தமிழகத்தில் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு
பொதுத்தேர்வு முடிந்த கையோடு விடைத்தாள் திருத்தும் பணியும் மும்முரமாக
நடந்தது. விரைவாக திருத்தும் நோக்கத்துடன் கூடுதல் ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும்
அழைப்பு விடுக்கப்பட்டது. பிளஸ் 2 விடைத்தாள்கள் ஏற்கனவே கடந்த 10ம் தேதியே
திருத்தி முடிக்கப்பட்டன. இதுபோல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான
விடைத்தாள்களும், பெரும்பாலான மையங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாக திருத்தி முடிக்கப்பட்டன.
தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும்
பணிகள் நடந்து வருகின்றன. வரும் 9ம் தேதி பிளஸ்2 ரிசல்ட் வர உள்ளது.
இதனிடையே விடைத்தாள் திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்கள்
எக்காரணம் கொண்டும் வராமல் இருக்கக்கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு
இருந்தது. இந்த நிலையில் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் குறித்த
பட்டியலை தயார் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆப்சென்ட்
ஆனவர்கள் பட்டியலை தயாரிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி
அலுவலர்கள் கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளனர். வராதவர்கள் ஏன் வரவில்லை
என்பது குறித்த விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இதனால் நடவடிக்கை
இருக்குமோ என ஆப்சென்ட் ஆன ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...