Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களுக்கு, விண்ணப்பங்களை அளிக்க ஏழு நாள் கெடு ஏன்?

     தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களுக்கு, விண்ணப்பங்களை அளிக்க, ஒரே கால அட்டவணையை பின்பற்றவில்லை என்றால், ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு அட்டவணையை பின்பற்றும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளி கல்வித் துறை பதிலளித்து உள்ளது. இவ்வழக்கின் மீதான உத்தரவை, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.


சென்னை, விருகம்பாக்கத் தைச் சேர்ந்த, "பாடம்' நாராயணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கான, 25 சதவீத இடங்களை நிரப்புவதற்கு, மே, 3ல் இருந்து 9ம் தேதிக்குள், விண்ணப்பத்தை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, பள்ளி கல்வித் துறையின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதை, ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

சம வாய்ப்பு : இதற்கு, பள்ளி கல்வித் துறையின், இணைச் செயலர் அழகேசன் தாக்கல் செய்த பதில் மனு: ஆண்டு தோறும், மாநில வாரிய பள்ளிகள், ஜூன், 1ல் துவங்கும். எனவே, முதல் வகுப்பில் மாணவர்கள் சேர்க் கை, ஏப்ரல் கடைசியில் துவங் கும். ஒவ்வொரு பள்ளியும், மே மாதத்தில் தான், மாணவர்கள் சேர்க்கையை நடத்தும். மாணவர்கள் சேர்க்கையில், பள்ளிகள் வெவ்வேறு கால அட்டவணையை பின்பற்றினால், ஏழை எளிய மாணவர்களுக்கு, பாரபட்ச உணர்வு ஏற்படும். கால அட்டவணை குறித்து, தெளிவான வழிமுறைகளை பிறப்பிக்கவில்லை என்றால், ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு கால அட்டவணையை பின்பற்றும். குழந்தைகளுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண் டும். 2013 - 14ல், 49,864 குழந்தைகள், 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டனர். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக, 2013 - 14ல், 2,559 கோடி ரூபாய், செலவிடப்பட்டுள்ளது.

தடை ஏதும் இல்லை : ஏழை, எளிய மாணவர்களுக்கான, 25 சதவீத இடங்களை, அவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என, அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களை கொண்டு, 25 சதவீத இடங்கள் நிரப்பப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் பெற்று திரும்ப அளிக்க, ஏழு நாட்கள் அவகாசம் வழங்குவதால், கால நீட்டிப்பு வழங்கப்படும் தேதிகளில், ஏழை எளிய மாணவர்கள் விண்ணப்பிக்க, தடை ஏதும் இல்லை. எனவே, மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, "முதல் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட முதல் பெஞ்ச், மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.




1 Comments:

  1. Dear sir/madam
    My sister son now 4th to 5th from matriculation school he is belongs to BBL if he is eligible kindly guide us

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive