Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப்-2-ஏவிண்ணப்பிக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம்

      குரூப்-2-ஏ பணிகளில் மேலும் 577 காலியிடங்கள் சேர்ப்பு: விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம்.

      குரூப்-2-ஏ பணிகளில் மேலும் 577 காலியிடங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. புதியவர்கள் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.
 
         பள்ளிக் கல்வி, போக்குவரத்து, பத்திரப்பதிவு, போலீஸ், வணிகவரி, தொழிலாளர் நலன் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களையும், சட்டசபை கீழ்நிலை எழுத்தர், டிஎன்பிஎஸ்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங் களையும் நிரப்புவதற்காக குரூப்-2-ஏ தேர்வு நடத்தப்படுகிறது.இந்த பதவிகள் அனைத்தும் நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களாக கருதப்படுகின்றன. இந்த நிலையில் மேற்கண்ட பதவிகளில் 2,269 காலியிடங் களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 5-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, தேர்தல் காரணமாக மே 18-ம் தேதி நடத்தப்பட இருந்த தேர்வு, ஜூன் 29-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

புதிதாக 577 பணியிடங்கள் சேர்ப்பு

           இந்த நிலையில், கணக்கு கருவூலத்துறையில் 469 கணக்கர் பணியிடங்களையும், வனத்துறையில் 108 உதவியாளர் இடங்களையும் (மொத்தம் 577) நிரப்ப குரூப்-2-ஏ தேர்வுக்கான துணை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது.தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதாவது பட்டப் படிப்பு என்ற போதிலும் கருவூல கணக்காளர் பணிக்கு பி.காம். பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏற்கெனவே குரூப்-2-ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த பணிக்கென புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. புதியவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

ஏப்.30 கடைசி நாள்

          ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 30-ம் தேதி ஆகும். விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணம், தேர்வுகட்டணம் ஆகியவற்றை மே 2-ம் தேதி வரை வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் செலான் மூலம் செலுத்தலாம் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive