தமிழகத்தில், 17 ஓட்டுச் சாவடிகளில்,
100க்கும் குறைவான வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஓட்டுச்சாவடி களில்,
காலையிலே அனைத்து வாக்காளர்களும் ஓட்டளித்தாலும், மாலை, 6:00 மணி வரை,
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அங்கிருக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன்
அறிவித்துள்ளது. இடம்பெயர்தல் காரணமாக, இந்த ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்
எண்ணிக்கை குறைந்து உள்ளது.
இதில் சென்னை தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி ஒன்றும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில், வீடுகள் எல்லாம் வணிக மையங்களாக மாறிவிட்டதால், இந்நிலை
ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுச்சாவடி எண்ணிக்கையை அதிகரிப்பது
எளிது. ஆனால், ஓட்டுச்சாவடியை அகற்றுவது எளிதல்ல என்பதால், குறைவான
வாக்காளர்கள் இருந்தாலும், பழைய ஓட்டுச்சாவடி தொடர்கிறது. பொதுவாக,
ஓட்டுச்சாவடியில் அதிக பட்சமாக, 1,500 வாக்காளர்கள் வரை இடம் பெறுவர்.
குறைந்தபட்சமாக எத்தனை வாக்காளர் வேண்டுமானாலும் இருக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...