ICSE வாரியத்தின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 15ம் தேதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தேர்வு, 2,500 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது மற்றும் 650 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.
CISCE -ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளைக் காணலாம். www.cisce.org அல்லது www.cisce.in.com
ஆகிய தளங்களில் ஒன்றில் log on செய்து, இண்டக்ஸ் எண்களை நிரப்பி,
அதன்பிறகு, பதிவு எண்ணை செலுத்தி தங்களின் மதிப்பெண் விபரங்களை அறியலாம்.
அதேசமயம், மேற்கண்ட விபரங்களை அளித்து, மொபைல் போனில் SMS அனுப்புவதன்
மூலமாகவும் ஒருவர் தனது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ICSE வாரிய மாணவர்களின் தேர்ச்சி
விகிதம் 98.20 என்பதாக இருந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...