பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு தேர்வையும், 15 பக்கங்களில் எழுதி முடித்து விடுவதால், ஒவ்வொரு தேர்விலும், 1.5 கோடி பக்க விடைத்தாள் வீணாகி வருகிறது.
இப்புதிய முறையில் வரவேற்கதக்க அம்சங்கள் இருந்தாலும், விடைத்தாள்கள் முழுவதையும், மாணவர்கள் பயன்படுத்தவில்லை என்பது, தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, 10ம் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு தேர்வையும், 15 முதல், அதிகபட்சமாக, 17 பக்கங்களுக்குள் எழுதி முடித்துள்ளனர். இதனால், 10.5 லட்சம் மாணவர்களால், ஒவ்வொரு நாளும், 1.5 கோடி பக்க விடைத்தாள் வீணாகி வருகிறது.அறிவியல் தேர்வு, 75 மதிப்பெண்ணுக்குத் தான் நடத்தப்படுகிறது. 25 மதிப்பெண்ணுக்கான செய்முறை தேர்வு, ஏற்கனவே பள்ளிகளில் நடந்து விடுகிறது. ஆனால், எழுத்து தேர்வுக்கும், அதே, 30 பக்கம் கொண்ட விடைத்தாள் வழங்கப்படுகிறது.இதுகுறித்து, ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பக்கம் பக்கமாக எழுதினால், அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற எண்ணம், ஒரு காலத்தில் தேர்வர்களிடையே இருந்தது. இதனால் 40, 50 பக்கம் என எதையாவது கிறுக்குவர். ஆனால், இப்போது கேள்விக்கு தகுந்தபடி, தேவையான அளவில் மட்டுமே, மாணவர்கள் விடை அளிக்கின்றனர்.&'பாயின்ட்&' அடிப்படையில் பார்த்து, விடைத்தாளுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது.
எனவே, &'வள வள&' என, விடை எழுதுவதை, மாணவர்களே விரும்புவதில்லை.மேலும், அனைத்து தேர்வுகளிலும், ஒரு மதிப்பெண் பகுதி உள்ளது. இதற்கு, &'ஏ, பி, சி&' என, ஏதாவது ஒரு எழுத்தை குறித்தாலே போதும். இதற்கு அதிக பக்கம் தேவைப்படாது. ஒவ்வொரு தேர்விலும், 75 லட்சம் தாள்கள் (சிங்கிள் ஷீட்), 1.5 கோடி பக்கங்கள் வீணடிக்கப்படுகின்றன; இதனால், பல லட்சம் ரூபாய் விரயம் ஏற்படுகிறது. இவ்வாறு, அந்த ஆசிரியர் தெரிவித்தார்.மாணவர்கள், அதிகளவில் விடைத்தாள்களை வீணடிப்பதை, தேர்வுத்துறையும் கவனித்துள்ளது. எனவே, அடுத்த ஆண்டு, பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.
since this time the question papers were so easy .there is no need of reducing the numbers of paper .think wise guys .madras university still follows . we were just following them. so we think the wastage paper is too much ,but i think that any ruling body or government cannot corrupt in this matter,so think wise and make sense on your comment
ReplyDelete