சித்திரை மாதம் முதல் தேதி அன்று விஷுகனி காணும் பழக்கம் உண்டு. மா, பலா, வாழை என்ற முக்கனியுடன், மற்ற பழவகைகள் வைத்து, தங்கம், வெள்ளி, புது உடைகள் வைத்து விளக்கு ஏற்றி வைத்து இரவே கண்ணாடி முன் அலங்கரித்து வைத்து விடுவார்கள்.
கண்விழித்தவுடன் இநத
மங்கல பொருட்களைப் பார்த்தால் ஆண்டு முழுவதும் வளமாய் இருக்கலாம் என்று நம்
முன்னோர்கள் வழக்கப்படுத்தி உள்ளார்கள்.வீட்டில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு
ஆசிர்வாதம் வழங்குவார்கள்.
வாழ்வில் இன்பமும், துன்பமும் கலந்து தான் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவது போல்
நம் முன்னோர்கள் சித்திரை திருநாளில் இனிப்பு, கசப்பும் என்று எல்லா சுவைகளும் கலந்து உண்ணும் பழக்கத்தை வைத்து
இருக்கிறார்கள். நம் உணவில் ஆறுசுவைகளும் இருக்க வேண்டும் என்பார்கள். அதை
ஒழுங்காய் கடைபிடிப்பது சித்திரைதிருநாளில் தான். இனிப்புக்கு வெல்லம் போட்ட அவல்,
புளிப்புக்கு மாங்காய் பச்சடி, கசப்புக்கு வேப்பம்பூ ரசம் என்று உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.
சித்திரை மாதம் வசந்தகாலம் என்பார்கள்.
இந்த சமயத்தில் பூக்கள், பழங்கள் , காய்கறிகள் என்று இயற்கை அள்ளி கொடுக்கும்.சித்திரை மாதத்தில்,
புளி, மாங்காய்,
மாம்பழம், பலா, வாழை மஞ்சள், இஞ்சி என்று எல்லாம் நிறைய கிடைக்கும். மக்கள் வருடத்திற்கு
வேண்டியவைகளைப் பதப்படுத்தி சேமித்து வைத்துக் கொள்வார்கள். “கனிகள் தின்னப் பிணிகள் போகும் என்பார்கள்” இந்த சீஸனில் மா, பலா, வாழை பழங்கள், மற்றும் எல்லா பழங்களும்
நிறையகிடைக்கும்.
வேப்பம்பூ இப்போது தான் கிடைக்கும்.
அதைக் காயவைத்து, மோரில்உப்புடன் போட்டு வெயிலில்
காயவைத்து எடுத்து வைத்துக்கொள்வார்கள், அதன்
மருத்துவப்பயன் அறிந்தமையால்.
"எல்லோரும் எல்லா நலங்களும் பெற்று வாழ
இந்த
இனிய சித்திரைத் திருநாளில்
வாழ்த்துகிறோம்!"
பாடசாலை குழுவினருக்கும், பாடசாலை வாசகர்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteThank you sir
ReplyDeleteபாடசாலை வாசகர்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteபாடசாலை வாசகர்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteThankyou padasalai
ReplyDelete