பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் 2 மதிப்பெண்
வினாவில் எழுத்துப் பிழை இருந்ததாக ஆசிரியர்கள் புகார்
தெரிவித்தனர்.வினாத்தாளில் கேள்வி எண் 29-ல் "போக்குவரத்து வாகனங்களில்
பயன்படுத்தப்படும் எரிபொருள் யாவை? (நான்கு மட்டும்)' என்ற கேள்வி
இடம்பெற்றுள்ளது.
இதே கேள்வி ஆங்கிலத்தில் க்ஷண்ர்-ச்ன்ங்ப்,
அதாவது உயிரி எரிபொருள் என்று கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் பகுதியில்
உயிரி எரிபொருள் என்பதற்குப் பதிலாக, எரிபொருள் என்ற வார்த்தை மட்டும்
இடம்பெற்றிருந்தது.
உயிரி எரிபொருளுக்கும், சாதாரண எரிபொருளுக்கும்
வித்தியாசம் உள்ளது. சாதாரண எரிபொருள் என்றால் மாணவர்கள் பெட்ரோல், டீசல்
போன்றவற்றை எழுதிவைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, இந்தக் கேள்விக்கு முழு
மதிப்பெண் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரினர்.
அதேபோல், இந்த வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினா
எண் 14-ல் ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம் 1-ன் கீழ் 3 என்றால் அந்த
ஆடியின் வகை? என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.
இதற்கு சரியான விடையாக குழி, குவி, சமதளம்
ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. கேள்விக்கு சரியான விடை குவிலென்சு ஆகும். ஆனால்,
புத்தகத்தில் குழிலென்சு விடையாக தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதேபோல்
வெவ்வேறு விடைகள் உள்ள குழப்பமிக்க கேள்வி கேட்கப்பட்டது. இந்த ஆண்டு
அதேபோன்ற கேள்வியைத் தவிர்த்திருக்கலாம் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்த 2 வினாக்களைத் தவிர்த்து வினாத்தாள்
மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு
அறிவியல் பாடத்தில் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறைத்
தேர்வுக்கு 25 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
இந்தத் தேர்வில் காப்பியடித்ததாக மாநிலம் முழுவதும் 5 பேர் மட்டுமே பிடிபட்டனர்
ore kelvikku irandu padilkal irppathal, kelviyai attend seitha anaithu manava manaviarkalukkum muzhu mathippen vazhangavendumai kettu kolkeren
ReplyDeleteramganesan.v.