பத்தாம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து 10ம் தேதி
முதல்விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளன. 10ம் வகுப்பு தேர்வுகள்
கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது.
தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுதி வருகின்றனர். மொழித்தாள்கள்,கணக்கு பாடங்களுக்கான தேர்வுகள் 4ம் தேதியுடன் முடிந்தன. நேற்று அறிவியல் பாடத் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் மிக எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு, நாளை சமூக அறிவியல் பாடத் தேர்வு நடக்கிறது. அந்த தேர்வுடன் 10ம் வகுப்பு தேர்வுகள் முடிகின்றன.தற்போது பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி 66 மையங்களில் நடக்கிறது. மொழித்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டுள்ளன. மற்ற பாடங்களில் ஒரு சில பாடங்கள் திருத்தி முடிந்துள்ள நிலையில் 10ம் தேதிக்குள் திருத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளதால் 10ம் தேதியுடன் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அதே விடைத்தாள் திருத்தும் மையங்களில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத் தவும் உத்தரவிடப்பட்டுள் ளது. இந்த பணி 22ம் தேதியுடன் முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு எடுத்து செல்லும் பணி நடக்கிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...