திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட
திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சட்டமன்றத்
தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய
வாக்குச்சாவடி துண்டுச்சீட்டுகள் (பூத் சிலிப்) ஏப்ரல் 10-ம் தேதி முதல்
வழங்கப்பட உள்ளன.
இதற்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர்
ச.காளிராஜ் மகேஷ்குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட
தேர்தல் அலுவலருமான சி.நடராசன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள
அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி
சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரம்,
பகுதி எண், வாக்காளரின் எண், வாக்காளரின் புகைப்படம் மற்றும் விவரங்கள்
அடங்கிய வாக்குச்சாவடி துண்டுச்சீட்டு (பூத் சிலிப்) வழக்கப்பட உள்ளது.
இந்த பணியானது 10.4.2014 தொடங்கி 18.4.2014 க்குள் முழுமையாக
முடிக்கப்படும்.
இந்த பணியில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கான வாக்குச்சாவடி நிலை
அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் ஈடுபடுவார்கள்.
இவர்கள் வாக்காளர்களிடம் வாக்குச்சாவடி துண்டுச்சீட்டு (பூத் சிலிப்)
வழங்கி விட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட
வாக்காளர்களிடமிருந்து கண்டிப்பாக கையொப்பம் பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட
ஆட்சியர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...