10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் கூடுதல் விடைத்தாள் வாங்குவதால் ஏற்படும் காலதாமத்தைத் தவிர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறையால், விடைத்தாளில் பல லட்சம் பக்கங்கள் வீணானது தெரிய வந்ததுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் புதிய முறை
அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி தேர்வு மையங்களில் 10 -ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு 30 பக்கங்களும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40
பக்கங்கங்களும் கொண்ட விடைத்தாள் கட்டுகள் வழங்கப்பட்டது. கூடுதல்
விடைத்தாள் வாங்கும் நேரத்தை மிச்சப்படுத்தவும், தேர்வு
கண்காணிப்பாளர்களின் கவனம் சிதறாமல் இருக்கவும் இந்த புதியமுறை
அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால், இந்தப் புதிய முறையால் கூடுதல் விடைத்தாள்
வாங்குவது பெரிதும் குறைந்ததுஉள்பட வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும்,
விடைத்தாள்கள் முழுவதையும் மாணவர்கள் பயன்படுத்தாமல், பல லட்சம்
பக்கங்களைக் கொண்ட விடைத்தாள்கள் வீணாகியுள்ளது தெரிய வந்துள்ளது.10-ஆம்
வகுப்பு மாணவர்கள் அதிகபட்சமாக 15 முதல் 17 பக்கங்களில் மட்டுமே தேர்வு
எழுதியுள்ளனர்.இதில், சராசரியாக 1000 பேருக்கு நான்கு பேர் மட்டும் 30
பக்கங்களுக்கும் கூடுதலாகத் தேர்வு எழுதியுள்ளனர். இதனால், 10ஆம் வகுப்புத்
தேர்வில் மட்டும் தினசரி சராசரியாக 1.5 கோடி பக்க விடைத்தாள்கள்
வீணாக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தேர்வுப் பணிக்குச் சென்ற ஆசிரியர்கள்
கூறியது:இந்த ஆண்டு பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறும்
வகையில் சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதியிருந்தனர்.
பதில்களை கட்டுரை வடிவில் எழுதுவது குறைந்துள்ளது. மேலும், அனைத்துத் தேர்வுகளிலும், ஒரு மதிப்பெண் கேள்விகள் உள்ளது. இதற்கு, ஏ.பி.சி. என்று குறித்தாலே போதும். இதற்கு அதிகப் பக்கங்கள் தேவைப்படாது.அதனால், நிகழாண்டில் ஒவ்வொரு தேர்விலும் 75 லட்சம் தாள்கள் வீதம் 1.5 கோடிபக்கங்கள் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் ரூபாய் விரயம் ஏற்படுவதாகத் தெரிகிறது. எனவே, இனிவரும் காலங்களில் விடைத்தாள் பக்கங்களை சிறிது குறைக்கலாம் என்றனர்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...