ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண்
பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள்
(எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால்,
18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகத்தில், 2010 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறையில் உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012ல் அறிவிக்கப்பட்ட ஓர் உத்தரவில்
(எண்:04/2012), 23.8.2010க்கு முன் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக
சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால்,
23.8.2013க்கு பின் பணி நியமனம் செய்வதில், அந்த ஆசிரியருக்கு டி.இ.டி.,
தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி, மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பட்டதாரி
மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 2010 முதல் 2012 வரை, 18 ஆயிரம் ஆசிரியர்கள்
நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், டி.இ.டி., தேர்வு எழுத தேவையில்லை என,
அப்போது அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், பணியேற்று இரு ஆண்டுகள்
நிறைவடைந்த ஆசிரியர்கள், தகுதி காண் பருவத்திற்காக, அவர்களது பணிப்
பதிவேடுகளை, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி
அனுப்பப்படும் பணிப் பதிவேடுகளை கல்வி அதிகாரிகள் பரிசீலித்து, 'உங்கள் பணி
நியமன உத்தரவில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தான்,
உங்களது தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்,' என பதில் கூறி,
சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், 'டி.இ.டி., தேர்வில், அரசு விலக்கு
அளித்தும், அது நடைமுறைப்படுத்தவில்லை,' என்றனர்.
cm's special cell , secretariat fort st george chennai 600009 . ரேகா இந்த அட்ரஸ்க்கு உங்கள் கம்ப்ளைன் , கோரிக்கையை அனப்புங்க உங்களுக்கு பதில் கட்டாயம் வரும் .
ReplyDeletecm's special cell , secretariat fort st george chennai 600009 . ரேகா இந்த அட்ரஸ்க்கு உங்கள் கம்ப்ளைன் , கோரிக்கையை அனப்புங்க உங்களுக்கு பதில் கட்டாயம் வரும் .
ReplyDeleteசனிகிழமை மனுவில் கையெழுத்து போட்ட CV முடித்த ஆசிரியர்களுக்கு நன்றி
ReplyDeleteஞாயிறு , திங்கள் செவ்வாய் புதன் அன்று TRB முன் CV முடித்த அனைத்து CV முடித்த candidate நண்பர்களும் வந்து உங்கள் கையளுத்தை போடவும்
எஞ்சேல் தாமஸ் 9791008103
ஞாயிறு அன்று மட்டும் 1.30 மணிக்கு மேல் வரவும்
Anyone write annamalai university(dde) dec 2013 exams?result (ug& pg) came ha? Reply pl
ReplyDelete....செய்தியின் தொடர்ச்சி
ReplyDeleteவழக்குகள் எத்தனை? கடந்த, 2013 தகுதித்தேர்வு சம்பந்தமாக மட்டும், குறைந்தது, 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இனிமேலும், வழக்குகள் பதிவு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது
என்கின்றனர் கல்வியாளர்கள்.
அடுத்தது என்ன? தேர்தல் முடிய வேண்டும். வழக்குகளின் தீர்ப்புகள் வெளியாக வேண்டும். எல்லாம் சரியாக நடந்து முடிந்தால், 2013ல் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் (டி.ஜி.டி.,) மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான (எஸ்.ஜி.டி.,), இறுதிதேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
பணியிடங்கள் எத்தனை? மொத்தம், 73 ஆயிரம் பேர் தேர்வாகியிருக்கும் நிலையில், அத்தனை காலி பணியிடங்கள் இருக்குமா என்ற சந்தேகம், தேர்ச்சி பெற்றிருக்கும் அனைவரிடமும் இருக்கிறது. மே மாதத்தில் வெளியிடப்பட உள்ள, காலி பணியிடங்கள் பற்றிய விவரத்திற்கு பின்பு தான், உண்மை நிலை தெரியவரும்.அரசு செய்ய வேண்டியது குழந்தைகளில், 6 - 14 வயதுக்குள்ளோருக்கான கல்வியை உறுதி செய்ய உருவான இலவச கட்டாய கல்விச் சட்டம், அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடஒதுக்கீட்டை அவர்களுக்கு வழங்கச் சொல்கிறது; ஆனால், தமிழகத்தில் அது இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வை, அடிக்கடி நடத்தி, ஆசிரியர்களுக்கான தகுதியை மேம்படுத்த சொல்கிறது; அதற்கும் அரசு வழி செய்யவில்லை. இது குறித்து, கிழக்கு பதிப்பக நிறுவனர் பத்ரி சேஷாத்ரி கூறியதாவது:இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் ஷரத்து 23 (2)ன்படி, இச்சட்டம் அமலுக்கு வந்த ஐந்து ஆண்டுகளுக்குள், அதாவது, ஏப்ரல், 2015க்குள், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களும், இந்த தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்! ஆனால், தமிழகத்தில் உள்ள 99 சதவீத ஆசிரியர்கள், இதில் இன்னும் தேர்ச்சி பெறவில்லை. இதுகுறித்து, மாநில அரசும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஆக, வருடத்திற்கு ஒரு முறை, காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டு வரும் இந்த தேர்வையாவது, திறம்பட நடத்தி, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தேர்வு எழுதியவர்கள் சார்பாக, தற்போது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் நியாயத்தை, பாரபட்சமின்றி ஆராய்ந்து, வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, 'தகுதியுள்ள ஒரு ஆசிரியர் ஏமாற்றப்படுவது, 100 மாணவர்களின் தோல்விக்கு சமம்' என்பதை, அரசு புரிந்து கொள்ள வேண்டும்' என்பதே, ஒட்டு மொத்த கல்வியாளர்களின் விருப்பம்.
....செய்தியின் தொடர்ச்சி