குரூப் -4 தேர்வு எழுதியவர்களின்
மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் இனவாரியான ரேங்க்-ம்
வெளியிடப்பட்டுள்ளன . இதில் மொத்த காலிப் பணியிடங்கள் இளநிலை
உதவியாளர்களுக்கு மட்டும் 3469 உள்ளது. எனவே ஒட்டுமொத்த ரேங்க் 3469க்குள்
இருந்தால் பணி கிடைத்துவிடும் என சிலர் தவறாக
எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். முக நூலிலும் அவ்வாறே பதிவிடுகிறார்கள்.
ஆனால் அவ்வாறு இல்லை என்பதே உண்மை. மொத்தமுள்ள 3469 பணியிடங்களை இனவாரியாக பிரித்தால் பொதுப் பிரிவினருக்கு 1075 பணியிடங்களும், பிற்பட்ட வகுப்பினருக்கு 919 பணியிடங்களும், மிக பிற்பட்ட வகுப்பினருக்கு 694 பணியிடங்களும், ஆதிதிராவிட வகுப்பினருக்கு 624 பணியிடங்களும் (அருந்ததியர் உட்பட), பழங்குடியினருக்கு 35 பணியிடங்களும் , முஸ்லிம்களுக்கு 122 பணியிடங்களும் நிரப்பப்படும். இதிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீடும் அடங்கும்.
ஆனாலும் பொதுப்பிரிவினர் என்ற வரையறைக்குள் அனைத்து இட ஒதுக்கீட்டுப்
பிரிவினரும் பங்கு பெற முடியும் என்பதால், ஒவ்வொரு பிரிவிலும் மேலும் 100
முதல் 200 பேர் வரை கூடுதலாக பணி வாய்ப்பு கிடைக்கப் பெறுவர். எனவே
இதனைப் புரிந்து உங்களின் பணி வாய்ப்பை பற்றி ஒரு முடிவுக்கு வரலாம்.
உங்கள் அனைவருக்கும் பணி கிடைக்க நல்வாழ்த்துகள் . அதிக
எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தராமல் இருக்க நிஜத்தை புரிந்து பணி கிடைக்கும்
நிலை இருந்தால் கொண்டாடுங்கள் . வாய்ப்பு குறைவாக இருந்தால் மேலும்
போராடுங்கள் .
நன்றி.
Thanks to Vidiyal.
சார் வணக்கம்
ReplyDeleteதற்போது இட ஒதுக்கீடு பற்றி தங்களுடைய கருத்து போதுமானதாக இருந்தது. மேலும் ஒரு சந்தேகம் எங்களுக்கு உள்ளது. உதாரணமாக MBCல் 20% ஒதுக்கப்படும். அந்த 20% ல் ஊனமுற்றோர்க்கு எத்தனை சதவீதம்? பெண்களுக்கு எத்தனை சதவீதம்? மற்றும் இந்த 20%ல் வேறு யாரல்லாம் இடம் பெறுவர் என்று விளக்க முடியுமா? தங்களுடைய பதில் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதே போன்று BC, SC, OC க்கும் உள் ஒதுக்கீடு பற்றி தொிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Sir my wife got 216 marks female BC CAN I HAVE A CHANCE?
ReplyDeleteMy name is wilson. I got 192 only but i am sc if any possible to me
ReplyDelete