Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Not Qualified Teachers Regarding - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

              பள்ளிக்கல்வி - இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமன ஒப்புதல்களை இரத்து செய்ய உத்தரவிடப்பட்டதற்கு பெற்ற இடைகால தடையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து CEO / DEO-களுக்கு உத்தரவு 

 பார்வை:      

1. அரசுக் கடிதம் எண். 13853 / நீ.வ.3/2013, நாள். 27.11.2013. 

 2. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அரசு சிறப்பு வழக்கறிஞரின் கடிதம் எண். VRS / SG / MDU / 2013, நாள். 26.11.2013.  

3. இவ்வியக்கக இதே எண்ணிட்ட கடிதம் நாள். 07.11.2013 மற்றும் 27.11.2013          

                      பார்வை (3)-ல் காணும் 07.11.2013 நாளிட்ட இவ்வியக்கக கடிதத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு பெறாமல் நியமனம் செடீநுயப்பட்ட ஆசிரியர்களின் நியமன ஒப்புதல்களை ரத்து செய்யுமாறு அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

           மேற்படி 07.11.2013 நாளிட்ட செயல்முறைகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்புடைய ஆசிரியர்களால் தொடரப்பட்டுள்ள வழக்குகளில், வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையாணையினை நீக்கக் கோரும் மனு மற்றும் அவ்வழக்குகளுக்கான எதிர்வாதவுரை முதலியவற்றை தயாரித்து, தொடர்புடைய அரசு சிறப்பு வழக்கறிஞரின் ஒப்புதலைப் பெற்று உடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதன் விவரங்கள் மற்றும் இவ்வழக்குகள் குறித்த நிலையினை விழிப்புடன் கண்காணித்து அவ்வப்போது இவ்வியக்கத்திற்கு தெரிவிக்குமாறும் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இச்செயல்முறைகளைப் பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதலை உடன் இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறும் தெரிவிக்கப்படுகிறது.  

இவ்வாறு இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.





1 Comments:

  1. please clarify this msg
    they are getting job or teiminated?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive