Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: 30 நாள்களுக்கு மேல் நடைபெறும். - 40 பேர் ஆப்சென்ட்.

           சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. நாளொன்றுக்கு 1,500 பேர் வரை மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்பதால் மொத்தம் 30 நாள்களுக்கு மேல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முதலில் நடைபெற உள்ளது. அதன்பிறகு, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
         இவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.TRB.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கூடுதலாக 46 ஆயிரம் பேர் தேர்ச்சியடைந்தனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுவதால் இவர்களுக்கு சான்றிதழ்சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் இருந்தது.இந்த நிலையில், பொதுத்தேர்வுகளைப் பாதிக்காத வகையில் மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது.

           சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மண்டல மையங்கள்: ஒவ்வொரு மண்டலத்திலும் இடம்பெறும் மாவட்டங்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் மையங்களின் விவரம்:

            கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,மதுரை - எம்.ஆர்.ஆர். எம்.ஏ.வி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அண்ணா பஸ் நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் எதிரில், மதுரை -20. தொலைபேசி எண்: 0452-2531754.

           திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி - ஏ.டி.எம்.ஆர்.சி.எம். வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 11, பேர்ட்ஸ் சாலை, கன்டோன்மென்ட் பகுதி, திருச்சி -01. தொலைபேசி எண்: 0431-2416648.

              கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி - சாரதா பாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராஜாஜி சாலை, சேலம் -7. தொலைபேசி எண்: 0427-2412160.

திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் - ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் பஸ் நிலையம் அருகில், கும்பகோணம். தொலைபேசி எண்: 0435-2431566.

            சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் - ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 319, ஜி.எஸ்.டி. சாலை, குரோம்பேட்டை,சென்னை - 44. தொலைபேசி எண்: 044-22417714. 

ஆசிரியர் தகுதி தேர்வு சான்று சரிபார்ப்பில் 40 பேர் ஆப்சென்ட்.


            ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. அதில் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். சுமார் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.இதில் இட ஒதுக்கீட்டு பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து 150க்கு 82 மதிப்பெண்கள் (55 சதவீதம்) எடுத்த 48 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
              முதல்கட்டமாக தாள் 1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்று சான்று சரிபார்ப்பு தொடங்கியது. ஒரு மையத்துக்கு சுமார் 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டனர்.நேற்றைய சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ள மொத்தம் 1250 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் சுமார் 40 பேர் வரவில்லை.





2 Comments:

  1. waste of money waste of time to attend cv because no use this verification

    ReplyDelete
  2. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு எதன் நோக்கத்திற்காக நடைபெறுகிறது?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive