முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்: ஒரு லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு - டிட்டோஜாக்
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசுக்கு
இணையான ஊதியம் சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவது, பங்கேற்பு ஓய்வு
ஊதிய திட்டம் ரத்து, தேர்வு நிலை சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும்
தர ஊதியமும் நிர்ணயிப்பது, ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து, தொடக்க கல்வித் துறையில் தமிழ் வழி கல்வி
முறை தொடர்வது, தமிழ், வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி
பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதம் டிட்டோஜாக் உயர்மட்ட குழுத் தலைவர்கள்
முதல்வரின் சிறப்பு செயலாளர், தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர்,
கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்க
கல்வித்துறை இயக்குநர் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தோம்.
அதைத் தொடர்ந்து பலகட்ட போராட்டங்கள்
நடத்தப்பட்டது. இருப்பினும் அரசு தரப்பில் டிட்டோஜாக்கின் கோரிக்கைகள் மீது
இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இதைத் தொடர்ந்து முதல்வரின் கவனத்தை
ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஒரு லட்சம்
ஆசிரியர்கள் பங்கேற்பார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.இதையடுத்து இன்று அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் பூட்டிவிட
ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.அதற்கு பதிலாக வேறு ஒரு நாளில் பள்ளியை
நடத்தவும் ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஆசிரியர்களுக்கு
விளக்கம் கேட்டு தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் நோட்டீஸ்
அனுப்பியுள்ளார். இது தவிர வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் ஒரு
நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யவும் தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDelete