அரசு பள்ளி கட்டடத்தை அனுமதி பெறாமல் திறந்து வைத்த மாஜி அமைச்சர் மீது
வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, டி.பண்ணைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அனைவருக்கும்
இடைநிலை கல்வி திட்டத்தின் மூலம் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் திறந்து வைப்பதாக இருந்த இந்த கட்டடத்தை அவசரகதியில்,
மார்ச் 2 ல் ஆத்தூர் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., மாஜி அமைச்சருமான
ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கான கல்வெட்டும்
வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமைஆசிரியர்இளங்கோ, அனுமதியின்றி
வைக்கப்பட்ட கல்வெட்டை அகற்றவேண்டும், என, ஜெயச்சந்திரன் எஸ்.பி.,யிடம்
புகார் கொடுத்தார்.மூன்று நாட்களாகியும் அனுமதியில்லாமல் விழா நடத்தியது
தொடர்பாக போலீசார் வழக்குபதிவுசெய்யவில்லை. இந்த சம்பவத்திற்கு
தலைமைஆசிரியரை பலிகடாவாக்க கல்வித்துறை அதிகாரிகள் முனைப்பு காட்டி
வருகின்றனர். தலைமைஆசிரியர் இளங்கோ கூறுகையில்,"கட்டடம் திறப்பு விழா பள்ளி
விடுமுறையான ஞாயிற்றுகிழமை நடந்துள்ளது. திங்களன்று பள்ளிக்கு
சென்றபின்பே, விழா நடந்தது குறித்து எனக்கு தெரியவந்தது
அன்றைய தினமே, கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். மாவட்ட எஸ்.பி.,யிடம் தற்போது புகார் கொடுத்துள்ளேன், என்றார்.கன்னிவாடி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் கூறுகையில், "எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்துள்ளனர்.எங்களுக்கு புகார் மனு வந்தபின், விசாரணை நடத்தப்படும். அரசு அனுமதியில்லாமல் திறப்பு விழா நடத்தி இருந்தால், சட்டப்படி வழக்குபதிவு செய்யப்படும், என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...