Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்தல் நடத்தை விதிமுறைகள்: கிடுக்கிப்பிடி விதிகள்.


         இந்திய தேர்தல் கமிஷனின் அறிவிப்பை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் கைகளை கட்டும் விதத்தில், பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.கிடுக்கிப்பிடி விதிகள்பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.
 
           அதைத்தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. அதன் விவரம் வருமாறு:–

* மக்களுக்கு எந்தவித நிதி உதவிகளை அளிப்பதாக அரசு அறிவிக்க கூடாது.

* அதைச்செய்வேன், இதைச்செய்வேன் என்று புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பை அள்ளி வீசக்கூடாது.

* புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அனுமதிக்கக்கூடாது.

* அமைச்சரோ அல்லது அரசியல் நிர்வாகிகளோ அந்த திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டக்கூடாது. எந்தவித திட்டத்துக்காகவும் தொடக்க விழாக்களை நடத்தக்கூடாது.

* அரசு அல்லது அரசியல் கட்சிப்பணியாளர்கள் யாரும், சாலை வசதி, குடிநீர் வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளிக்க கூடாது.

* அரசுப்பணி அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் எந்தவித தற்காலிக அல்லது நிரந்தரபணிநியமனத்தை, பதவி உயர்வை அரசு அளிக்க கூடாது.

* அமைச்சர்கள் தங்கள் அலுவலக பயணத்தை தேர்தல் பணியோடு இணைக்க கூடாது.

* அவர்கள் தேர்தல் பணிக்காக அரசுக்கான அம்சங்களை பயன்படுத்த கூடாது. அரசு வாகனம், சுழல் விளக்குகளை பயன்படுத்த கூடாது.உணர்ச்சியை தூண்டும் விதத்தில்...

* சாதி, மதம் தொடர்பான உணர்ச்சியை தூண்டும் விதத்தில் செயல்பட கூடாது.

* பிரசாரத்தில் குற்றச்சாட்டுகள் அனைத்துமே, அடுத்த கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், பழைய பதிவுகள், பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும்.

* சாதி, மத உணர்வுகளை வாக்குக்காக பயன்படுத்த கூடாது.

* கோவில், மசூதி, தேவாலயங்களை அரசியல் பிரசார ஸ்தலமாக பயன்படுத்த கூடாது.

* அரசு பணத்தை செலவழித்து, ஆளும் கட்சியினர் விளம்பரம் செய்ய கூடாது.

* அரசு திட்டங்களில் குறிப்பிட்ட அரசியல் தலைவரின் பெயர், படம் இடம்பெற கூடாது. அப்படி இடம்பெறும் பெயர், படத்தை மறைக்க வேண்டும்.

இதுபோன்ற பல்வேறு விதிமுறைகளை வெவ்வேறு தலைப்புகளில் இந்திய தேர்தல் கமிஷன்www.elections.tn.gov.inஎன்ற தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive