அரசு பணி தேர்வாணையத்தால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வி.ஏ.ஓ., தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு ஒதுக்கீட்டில், குளறுபடி செய்துள்ளதால், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது, 'ஆன்-லைன்' முறையில் விண்ணப்பிக்கும் போது, கை அல்லது கால் இயக்கத்தில் குறை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் 'ஆப்சன்கள்' கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த பார்வை திறன் கொண்டவர்கள், 40 சதவீதம் காதுகேளாதோர் போன்றவர்கள் விண்ணப்பிக்க எவ்வித 'ஆப்சன்களும்' வழங்கப்படவில்லை. இதனால், விண்ணப்பிக்க இயலாத சூழலில் செய்வதறியாது பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் தவித்து வருகின்றனர்.யூடைஸ் அமைப்பின் மாவட்ட தலைவர் சூரிய நாகப்பன் கூறுகையில், '' குரூப் 1 தேர்வில், பார்வையில்லாத ஒரு பெண் கடந்த முறை தேர்ச்சி பெற்ற நிலையில், மாற்றுத்திறனாளிகளின் பாதிப்பை குறித்து ஆராயாமல், ஒரே ஒரு 'ஆப்சன்' கொடுத்திருப்பது நியாயமற்றது. இது குறித்து உயர் நீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடரப்படும். அரசு தேர்வாணையம் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...