பணி விடுவிப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் கல்லூரியின் பெண் விரிவுரையாளர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் "நோட்டீஸ்" அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை, லயோலா கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய பெண் ஒருவர் அதே கல்லூரியில் தமிழ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்புகார் கூறினார். அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: "பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் மீது, வழக்குப் பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தேன். உயர் நீதிமன்றமும் இம்மாதம் 6ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில், என்னை பணியில் இருந்து விடுவித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், எந்த காரணங்களையும் தெரிவிக்கவில்லை.
இயற்கை நியதி பின்பற்றப்படவில்லை. எனவே, பணியில் தொடர கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். பணி விடுவிப்பை ரத்து செய்ய வேண்டும்." இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் ஆஜரானார். மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி அரசுக்கும், லயோலா கல்லூரியின் செயலருக்கும் "நோட்டீஸ்" அனுப்ப நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...