மக்களவைத் தேர்தல் நிகழ்வுகளை மடிக்கணினியில் பதிவு செய்ய
தகுதியானஇளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் வெளியிட்ட
செய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தலின்போது தூத்துக்குடி மாவட்டத்தில்
உள்ளவாக்குச்சாவடிகளில் நடைபெறும் நிகழ்வுளை காலை 7 மணி முதல் மாலை 5மணி
வரை மடிக்கணினியில் பதிவு செய்வதற்கு தகுதியான இளைஞர்கள்மற்றும் மாணவர்கள்
தேவைப்படுகிறார்கள். இந்த பணியின்போது, மிகப்பெரிய ஜனநாயக
முறையிலானதேர்தலை நேரிடையாக வாக்குச்சாவடியிலிருந்து காண
இளைஞர்களுக்கும்மாணவர்களுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு ஆகும். இந்தப்
பணியில்
பங்கேற்பவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால்
நிர்ணயிக்கப்படும்மதிப்பூதியம் வழங்கப்படும். விருப்பமுள்ள இளைஞர்கள்
மற்றும் மாணவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும்தொலைபேசி எண்
குறித்தவிவரங்களை 9498002589 என்றஎண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக
தெரிவிக்கலாம் என செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...