Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக துவக்க பள்ளிகளில் ஆங்கிலவழி சேர்க்கை துவக்கம்.

 
             நடப்பு கல்வியாண்டில், வகுப்புகள் இன்னமும், முடிவடையாத நிலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், வரும், கல்வி ஆண்டிற்கான, ஆங்கில வழி கல்வியில், மாணவர் சேர்க்கைதுவக்கப்பட்டுள்ளது.
 
           ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, துவக்கப் பள்ளியாக கருதப்படுகிறது. தமிழக, அரசு துவக்கப் பள்ளிகளில், கடந்த ஆண்டு, ஆங்கில வழி கல்வி பாடத்திட்டம் அறிமுகம்செய்யப்பட்டது.

            இதன் படி,ஒன்றாம் வகுப்புக்கு, மாணவர் சேர்க்கை நடந்தது. ஒரே பள்ளியில், ஒரு வகுப்பறையில் தமிழ்வழி கல்வியும், மற்றொரு வகுப்பறையில், ஆங்கில வழி பாடமும்நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆங்கில வழி கல்விக்கான, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அரசு துவக்க பள்ளிகளில், வரும் கல்வியாண்டுக்கான, மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. நடப்பு கல்வியாண்டு, முடிவதற்குள், வரும் கல்வியாண்டிற்கான, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு, ஆங்கில வழி கல்வி, மாணவர் சேர்க்கை நடப்பதாக, அரசு துவக்க பள்ளிகள் முன், அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில், தமிழ் வழி கல்வி, பெரும்பாலும் கிடையாது. அரசு பள்ளிகளில் மட்டும் தான், தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது.

              ஆங்கில வழியில், தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைதுவங்கும் முன், அரசு பள்ளிகளில், சேர்க்கை, துவங்கியுள்ளது. கல்வியாண்டு, ஜூன்மாதம் துவங்கி, ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. இந்த ஆண்டு, மார்ச் மாதத்திலேயே, துவக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.




5 Comments:

  1. மிகவும் வரவேற்கத்தக்க விசயம். அதேநேரம் ஆசிரியர்களும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பாடம் புகட்ட வேண்டும்.... நல்லது நடக்கட்டும்...

    ReplyDelete
  2. welcome. high schoolayum ippady E/M aarambicha parents oda varumanam 50000/ per year micham. adumattum illama E/M padicha BT asst appoint pannuna miga sariyaga irukkum.

    ReplyDelete
  3. Nalladhey nadakatum

    ReplyDelete
  4. Good keep it up

    ReplyDelete
  5. நல்லதை நாளும் வரவேற்போம் !!!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive