தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன்
வெளியிட்ட அறிக்கை:பங்களிப்பு ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வு ஊதிய
திட்டத்தை அமல் படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும்
நேரம் காலை 9.15 மணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் நலன் கருதி
பழையபடியே காலை 10 மணி என மாற்ற வேண்டும். ஆசிரியர் -அரசு ஊழியர்களுக்கான
மருத்துவ காப்பீட்டு திட்டம் அவர்களின் பெற்றோருக்கும் பயனளிக்கும் வகையில்
மாற்ற வேண்டும்.
மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி அரசு விடுமுறை
அறிவிக்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்துக்கு
நிகராக மாநில ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். மெட்ரிக் பள்ளிகள்
இயக்ககத்தை கலைத்துவிட்டு மெட்ரிக் பள்ளிகளின் பெயரை உயர்நிலை மற்றும்
மேனிலை பள்ளிகள் அல்லது சுயநிதி பள்ளிகள் என்று மாற்றம் செய்ய வேண்டும்.
இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இளமாறன் அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...