தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலை தொடர்ந்து, அரசு
துறை சார்ந்த இணையதளங்களில், தமிழக முதல்வரின் படங்கள் முடக்கப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தால், தமிழக முதல்வர் படத்துடன் கூடிய
அரசின் சாதனை விளம்பரங்களை அகற்ற, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது.
இதையடுத்து, அரசு
திட்டங்களில் முதல்வர் படத்தையும், "அம்மா' என்ற வார்த்தையையும் பயன்படுத்த
தடை விதிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனிடம் தி.மு.க., சார்பில் மனு
கொடுக்கப்பட்டது. இ?த தொடர்ந்து, அம்மா உணவகத்தில் இருந்த முதல்வர்
போட்டோவுக்கு வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. "அம்மா' குடிநீர்
பாட்டில்களில் "ஸ்டிக்கர்' அகற்றப்பட்டது. தமிழக அரசு இணையதளம், அரசு துறை
சார்ந்த இணையதளங்களில், முதல்வரின் படங்கள் முடக்கப்பட்டு உள்ளன. "போட்டோ
கேலரி' பகுதியில், செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் பங்கேற்ற
நிகழ்ச்சியின் போட்டோ மட்டும் உள்ளது. இதே போல் பொதுப்பணித்துறை, குடிநீர்
வடிகால் வாரியம், உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறை இணையதளங்களிலும்
முதல்வரின் படம் முடக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இணையதளத்தில், முதல்வர்
பயோ-டேட்டா பகுதியில் மட்டும் ஜெ., படம் இடம் பெற்று உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...