Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உடற்பயிற்சி


       உடற்பயிற்சி என்பது வாழ்வில் இன்றியமையாத ஒரு செயல்பாடாகும். உடலை உறுதியாகவும், நோயின்றியும் வளர்க்க உதவுபவை உடற்பயிற்சிகளே. 

        உடற்பயிற்சியை நீங்கள் ஏன் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என்று விளக்கும் 8 காரணங்களை நாங்கள் இந்த கட்டுரையில் வழங்கியுள்ளோம். நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உடற்பயிற்சி செய்யலாம் என்று சிலர் சொல்லுவார்கள். நீங்கள் காலை 7 மணிக்கு செய்தாலும் அல்லது இரவு 7 மணிக்கு செய்தாலும் பலன் ஒன்றாகவே இருக்கும் என்பது இவர்களின் வாதம். இருந்தாலும், உடற்பயிற்சி வல்லுநர்கள் காலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதையே நன்மை தரும் என பரிந்துரைக்கிறார்கள். தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும் 15 வழிகள்!!! நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் மற்றும் டம்பெல்ஸ்களை தூக்க நேரம் பார்ப்பது போன்றவை மட்டுமல்லாமல், காலை வேளைகளிலேயே நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை இதோ 8 காரணங்களால் நாங்கள் விளக்குகிறோம்.

           உடலின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தல் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் உறுப்புகள் வேகமாக வேலை செய்யத் துவங்குகின்றன. இதனால் ஊக்கம் பெறும் உடல் உறுப்புகள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்கின்றன. இதன் மூலம் ஓய்வு நேரத்திற்குப் பதிலாக, உடற்பயிற்சியின் போது உடலும் அதிகமான கலோரிகளை எரிக்கச் செய்கின்றது. நீங்கள் நாள் முழுவதும் சீட்டை விட்டு எழுந்திருக்காமல் வேலை செய்பவராக இருந்தால், உங்கள் உடல் சுறுசுறுப்பாக இருக்கச் செய்ய தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். சக்தியூட்டம் பெறுதல் காலை நேரத்தில் உடற்பயற்சி செய்வதால் உங்கள் உடலுக்கு மிகுந்த சக்தி கிடைக்கிறது. எனவே, பருவநிலையும், களைப்பும் உங்களை ஆட்கொள்ளும் முன்னர், காலையிலேயே ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். இவ்வாறு செய்வதன் மூலமாக என்டோர்பின்கள் மற்றும் பிற ஹார்மோன்கள் உடலுக்கு நாள் முழுவதும் தேவையான சக்திகளை வளமாக கொடுக்கத் துவங்குகின்றன. மனதுக்கு புத்துணர்ச்சி உடற்பயிற்சி செய்வதால் மனநலம் மிகவும் மேம்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

              மேலும் நேரமாக உடற்பயிற்சி செய்வதால் நல்ல மனநிலையை உருவாக்கி, மனநலத்தை பாதுகாக்க முடியும். உங்களுடைய நாள் தொடங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்யத் துவங்கினால் ஒவ்வொரு நாளும் இருக்கும் முந்தைய நாளின் மன அழுத்தத்தை களைந்து விட முடியும்.. இதற்காக ஒரு பெஞ்ச்-பிரஸ் அல்லது ட்ரெட்மிலை பயன்படுத்தலாம். இவ்வாறான உடற்பயிற்சிகள் வரும் நாளில் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை வெகுவாக குறைக்கின்றன. பசியை கட்டுப்படுத்துதல் காலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதால் பசி கட்டுக்குள் வருவதை பெரும்பாலானவர்கள் உணர்ந்திருப்பார்கள். 

             இவர்கள் குறைவான உணவுகளை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் (உடற்பயிற்சியின் காரணமாக உருவாகும் என்டோப்பிரின்கள் பசியை கட்டுப்படுத்துகின்றன), அவை சுகாதரமான பலன்களை தரும் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவார்கள். இதன் மூலம் உங்களுடைய உணவு சாப்பிடும் நேரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உணருவீர்கள். பசியையோ அல்லது சக்தி பெருமளவு வடிந்து விட்டதைப் போலவோ இருக்கும் சூழல்களை அனுபவிக்கவும் மாட்டீர்கள். இந்த உணர்வுகள் தான் நொறுக்குத் தீனிகளை சாப்பிட நம்மை தூண்டுகின்றன. விழிப்புணர்வு அதிகரித்தல் ஒரு நல்ல உடற்பயிற்சிக்குப் பின்னர், அந்நாளில் வரும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வண்ணம் மிகவும் விழிப்புணர்வுடன் நீங்கள் இருப்பதை கவனித்திருப்பீர்கள். 

              எனவே, உங்களுடைய நாள் தொடங்குவதற்கும் முன்னர் நீங்கள் உடற்பயிற்சியை முடித்திருந்தால், இது போன்ற சோதனைகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருப்பீர்கள். உண்மையில், நீங்கள் செய்யும் உடற்பயிற்சியின் சுறுசுறுப்பு, அது முடிந்த 4 முதல் 10 மணி நேரங்களிலேயே மிகவும் பலனுள்ளதாக உள்ளது. இதன் காரணமாக, இரத்தம் வழியாக மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவு அதிகமாக இருக்கும். நல்ல தூக்கம் தினமும் நன்றாக உடற்பயிற்சி செய்வதன் காரணமாக நல்ல தூக்கமும், அதன் தரமும் அதிகரிக்கும். உங்களுடைய உடல் இது படுக்கைக்கு செல்வதற்கான நேரம் என்பதை எடுத்துச் சொல்லும். இது போன்ற நேரங்களில் அடுத்த நாள் காலை உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்கு வருமாதலால், குறைந்த பட்ச தூக்கமாவது நீங்கள் தூங்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். நீங்கள் சரியாக தூங்கவோ அல்லது ஓய்வெடுக்கவோ செய்யாமல் இருந்தால் உங்களுடைய உடலை உறுதிப்படுத்தவோ அல்லது இதயத்தையோ பலமாக்குவதோ மிகவும் கடினமாகி விடும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive