மனித சிறுநீரகங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் தமிழில் தரும் இணையதளம் எழும்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
கிட்னி ஃபவுன்டேஷன் சார்பில் வடிவமைக்கப்பட்ட
இந்த இணையதளத்தை, சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணர்
பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். இது குறித்து கிட்னி ஃபவுன்டேஷனை சேர்ந்த
யுகேந்தர் கூறியதாவது:
நம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றான
சிறுநீரகங்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்று அல்லாத
நோய்களால் பாதிக்கப்படுகின்றன.
இந்த நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிறுநீரங்களின் முக்கித்துவம்
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது.இதை கருத்தில் கொண்டு, ஜ்ஜ்ஜ்.ந்ண்க்ய்ங்ஹ்ண்ய்பஹம்ண்ப்.ஸ்ரீர்ம் என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.இதில், சிறுநீரகங்களின் முக்கியத்துவம்,
செயல்பாடு, அவற்றை பாதுகாக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், சிறுநீரக
பாதிப்பின் அறிகுறிகள், அதை உறுதிசெய்வதற்கான பரிசோதனைகள், சிறுநீரக மாற்று
அறுவை சிகிச்சை உள்ளிட்ட மனித சிறுநீரகங்கள் குறித்த அனைத்து தகவல்களும்
தமிழில் இடம் பெற்றுள்ளன.
தேவைப்படுவோர் இந்த தகவல்களை இலவசமாக
பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். சிறுநீரகங்கள் பற்றிய தகவல்களை
ஆங்கிலத்தில் அளிக்கும் ஜ்ஜ்ஜ்.ந்ண்க்ய்ங்ஹ்உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்.ஸ்ரீர்ம்
என்ற இணையத்தளம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...