பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமல்: 24 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டின் பொதுத் துறை, தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான, பி.எஸ்.என்எல்.,
லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., மூத்த அதிகாரி, கவுதம் சக்கரவர்த்தி
கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களின், லேண்ட்லைன் மற்றும்
பிராட்பேண்ட் கட்டணங்களில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லேண்ட்லைனுக்கான,
"ஒன் இந்தியா ஒன் பிளான்' மாதக் கட்டணம், 180 ரூபாயில்இருந்து, 195
ரூபாயாகஉயர்த்தப் பட்டுள்ளது. பிராட்பேண்ட் சேவைக்கான கட்டணங்களும்
உயர்த்தப்பட்டுள்ளன. பிளான்களுக்கு தகுந்தவாறு, 24 ரூபாய் முதல், 350
ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுகள், இன்று
முதல் அமலுக்கு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
BSNL நிறுவனத்திற்கு வருமானம் குறைந்து போனதா
ReplyDeleteBSNL நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் நிலையில இந்த கட்டண உயர்வு, நாம் BSNL உடன் தொடர்ந்து இணைந்திருப்பது பற்றி மறுசீராய்வு செய்யத் தூண்டுகிறது. ஏற்கனவே அரசு ஊழியருக்கு வழங்கிவந்த 20 சத கட்டண சலுகை 10 சதமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், சற்று குறைவான வேகம் இருந்தாலும் பரவாயில்லை தனியார் நிறுவன இணைப்புக்களே மேல் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
ReplyDelete