தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் யுஜிசி விதிமுறைகளின் அடிப்படையில் தகுதியானவர்களை துணை வேந்தர்களாக நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின்
அமைப்பாளர் எஸ்.கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள
மனு: சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சிபாரதிதாசன் பல்கலைக்கழகம்,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் யுஜிசியின் விதிமுறைகள்
கடைபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக அரசுக்கும் கடிதம் எழுதினேன்.
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தற்போது இந்த 3 பல்கலைக் கழகங்களிலும்
துணை வேந்தர் பதவியிடம் காலியாக உள்ளது.எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து
அரசு பல்கலைக்கழகங்களிலும் துணை வேந்தர் நியமனத்தில் உரிய வழிமுறைகளைக்
கடைபிடிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த
மனு பொறுப்பு தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி
எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல் வைகை, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சோமய்யாஜி, அரசு வக்கீல் பி.சஞ்சய்காந்தி ஆஜராகினர்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு:பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தேர்வு, வெளிப்படையான முறையிலேயே நடந்துவருகிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தனித்தனியான ஆய்வுக் குழு உள்ளது என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. யுஜிசி சார்பில் ஆஜரான வக்கீல், யுஜிசி கொண்டுவந்துள்ள விதிகள் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும். எனவே, இந்த விதி தொடர்பாக உரிய உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று வாதிட்டார்.மனுவில் கூறப்பட்டுள்ள 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை நியமிப்பதற்கான ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கல்வித் தகுதிஉள்ளிட்ட விஷயங்களில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.
துணை வேந்தர்கள் தேர்வுமுடிந்த பின்னர், அதில் விதிமீறல்கள் இருந்தால் அதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரலாம். ஊகத்தின் அடிப்படையில் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...