வாக்காளர் பட்டியலில், இதுவரை பெயர்
சேர்க்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு, நாளை அளிக்கப்படுகிறது. இதற்காக,
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு,
அடுத்த மாதம், 7ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், அடுத்த மாதம்
ஒட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,
கடைசி வாய்ப்பாக, நாளை சிறப்பு முகாம், தமிழகம் உட்பட நாடு முழுவதும்
நடக்கிறது.இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேர்தல்
கமிஷன் அறிவித்துள்ளது. இதற்காக, அனைத்து ஓட்டுச்சாவடிகளில், நாளை காலை,
9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க
சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஓட்டுச்சாவடி மையத்தில், வாக்காளர் பட்டியல்
பார்வைக்கு வைக்கப்படுவதுடன், அங்கு பணியிலிருக்கும் அலுவலர்கள் எழுதப்
படிக்கத் தெரியாதவர்களுக்கு படித்துக்காட்டுவர். வாக்காளர் அடையாள அட்டை
வைத்திருந்தாலும், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா
என்பதை உறுதி செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
'ட்விட்டரில்':
பெயர் விடுபட்டவர்கள் படிவம், '6' ஐ பூர்த்தி
செய்து, வயது மற்றும் இருப்பிட சான்றுகளை அளிக்கலாம். இந்த முகாமில்,
பட்டியலில் பெயர் மட்டும் சேர்க்கப்படும். நீக்கம், திருத்தம் செய்யப்பட
மாட்டாது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, 'ட்விட்டர்' சமூக
வலைதளத்தில் விடுத்த வேண்டுகோளில், 'அனைவரும் ஓட்டளிக்க வசதி யாக,
பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு, பதிவு செய்து கொள்ள வேண்டும்' என,
கோரியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...