Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது: தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் நடக்கிறது


           தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னை உள்பட 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது.

             கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் 26 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பின்னர் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை 5 சதவீதம் குறைத்து (55 சதவீதமாக) அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால், தகுதித்தேர்வில் கூடுதலாக சுமார் 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

            கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு (முதல் தாளில் தேர்ச்சி பெற்றோர்) மார்ச் 12-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என்றும் அதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

தேர்தல் ஆணையம் அனுமதி

            இந்நிலையில், மக்களவைத் தேர்தல் அறிவிப்பு கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்டதால் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் பிரச்சினை எழுந்தது. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதி வேண்டி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் கடிதம் எழுதினார்.

தேர்தல் ஆணைய அனுமதி கிடைத்ததையடுத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணியை தொடங்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது.

            ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது. ஒவ்வொரு மையத்திலும் தலா 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவினர் 25 பேரின் சான்றிதழ்களை சரிபார்ப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு மண்டலத்திலும் 250 பேர் வீதம் 5 மண்டலங்களிலும் சேர்த்து தினமும் சுமார் 1,250 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மண்டலம்

              சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு குரோம்பேட்டை ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. முதல் நாளில் 280 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சில ஆசிரியைகள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர்.

முன்னதாக, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் பதிவு செய்வது குறித்து மையத்தின் மண்டல அதிகாரியான திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (எஸ்.எஸ்.ஏ.) எம்.ராஜமாணிக்கம், ஒருங்கிணைப்பு அதிகாரியான சென்னை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்) முதல்வர் ஆர்.ஐயப்பன் ஆகியோர் விளக்கிக்கூறினர். சான்றிதழ் சரிபார்ப்பு பணியை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் டி.சீதாலட்சுமி ஆய்வுசெய்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ஜெயராமன் மற்றும் ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை மேற்கொண்டனர்.

ஏப்ரல் 10-ல் முடிவடைகிறது

சென்னை மண்டலத்தில் 3,877 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. இப்பணி மார்ச் 31-ம் தேதி வரை நடக்கும் என்று மண்டல அதிகாரி ராஜமாணிக்கம் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஏப்ரல் 10-ம் தேதி வரை நடக்கும். அதன்பிறகு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.




4 Comments:

  1. 2012 ஆசிரியர் தகுதித் தேர்வு 5%மதிப்பெண் தளர்வு அரசாணை வழக்கு நீதியரசர் நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. இன்று வழக்குகளின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும்.

    ReplyDelete
  2. டாப் மோஸ்ட் மேட்டர் ,.
    ப்ளீஸ் forward it to , ஜனவரியில் CV முடித்த candidate..
    ரொம்ப அவசரம் ப்ளீஸ்..
    2013 இல் டேட் தேர்வில் 90 மார்க்கு மேல் எடுத்து cv முடித்து இருக்கிறோம் தற்பொழுது 82 முதல் 89 மார்க் வரை எடுத்தவர்களை cv இகு அழைத்திருக்கிறார்கள் அடுத்து 2012 இல் 82-89 மார்க் எடுத்தவர்களை அழைப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் குறைந்தது அவர்கள் 20 ஆயரம் (2012 &2012 சப்ப்ளிமேண்டரி ) பேர் இருப்பர்கலாம் இதனால் cv முடித்த எதிர்பர்கப்ப் படுகின்ற 15 ஆயரம் பேருக்கும் பணி கிடைப்பது கஷ்டம் weightage 80 முதல் அதற்க்கு மேல் இருந்ந்தாலும் பணி கிடைப்பது அரிது அதனால் cv முடித்த அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்
    நமது வழக்கு மற்றும் 2012 டேட் வழக்கும் நிதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது ஆனால் சந்தேக பார்வையில் உள்ளது….

    நமக்கு வேலை வேண்டும் என்றால் அனைவரும் ஒன்று சேர்வோம்
    நமது குறைகளை போக்க ,
    நமது முதல்வர் இடமும் மற்றும் பலரிடம் அற வழியில் மனு கொடுக்க தங்கள் பொன்னான கையெழுத்தை இட்டுவிட்டு செல்லும் மாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
    மாவட்ட வாரியாகவும் அனுப்பலாம்
    உங்கள் ஆதரவை தாரீர் வெற்றி பெற செய்வீர்
    உங்கள் நண்பர்களுடன் தகவலை பரிமாறிக்கொளவும்
    PLZ SEND UR IDEAS and further action to - all this is necessary , SHARE WITH alwinthomas342@yahoo.in எஞ்சேல் தாமஸ் 9791008103

    தயவு செய்து
    இந்த தகவலை சமுக வலை face book , twitter .,,, போன்றவை முலம் பரப்பவும்

    ReplyDelete
  3. When will the justice give the relaxation marks for 2012 candidates because the CV is going on. What is going on the MADRAS HIGH COURT about 2012 TET.
    padasalai Nanba give the details about 2012 TET relaxation marks.

    ReplyDelete
  4. தம்பி ஆல்வின் தாமஸ் வருத்தபடாதீங்க
    2012 மற்றும் 2013 டெட்டில் பாஸ் செய்த அத்தனை பேருக்கும் ஜாப் கண்டிப்பாக உண்டாம்
    எப்படின்னு தெரியுமா
    தொகுபூதிய அடிப்படையில் தான்
    1 பி.டி போஸ்ட்டுக்கு 5 தொகுப்பூதிய ஆசிரியர்கள்
    இது எப்புடி
    நாங்களும் யோசீப்போமுல..........
    அதனால கவலப்படாதீங்க............
    கண்டிப்பா வேலை உண்டு

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive