பிளஸ்2, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு மையங்களுக்கு, மின்தடையில் இருந்து
விலக்கு அளிக்க வலியுறுத்தி, கலெக்டர்கள், கல்வித்துறை சார்பில்,
மின்வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கடுமையான மின்தடைகாரணமாக, பொதுத்தேர்வு மையங்களில்,
ஜெனரேட்டர்கள் பயன்படுத்த பட்டன. மார்ச் 3ல் பிளஸ் 2, மார்ச் 26ல்
10ம்வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளநிலையில், மின்உற்பத்தி குறைந்ததால்,
சில நாட்களாக, சராசரியாக தினமும் இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரை,
மின்தடை செய்யப்படுகிறது.இதுமேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக
கூறப்படுகிறது. இதனிடையே, பொதுத்தேர்வு மையங்களுக்கு, மின்தடையில் இருந்து
விலக்கு அளிக்க வலியுறுத்தி, கலெக்டர்கள், முதன்மைக்கல்விஅதிகாரிகள் மூலம்,
மாவட்ட மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரி கூறுகையில்," தேர்வுத்துறை
இயக்குனர் ஆலோசனைப்படி, பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கால அட்டவணை,
தேர்வு மைய விபரங்கள் குறித்து, அக்கடிதத்தில் விரிவாக குறிப்பிட்டு,
தேர்வுநேரத்தில்,அம் மையங்களுக்கு, மின் தடையில் இருந்து விலக்கு
அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.எனவே, இம்முறை, மின்தடை பிரச்னை
இருக்காது என நம்புகிறோம். எனினும், மையங்களில், ஜெனரேட்டரையும் தயார்
நிலையில் வைத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...