விதிகளுக்கு மாறாக, மாற்றுத் திறனாளிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட
கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்
பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்
மக்களவைத் தேர்தல் நடைபெறும் தேதிகள்
அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது தேர்தல் பணிகளுக்காக அரசு ஊழியர்களைத் தேர்வு செய்து, பயிற்சி அளிக்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம்
தொடங்கியுள்ளது.
பொதுவாக தேர்தல் பணிகளில் தங்களை
ஈடுபடுத்திக்கொள்ள மாற்றுத்திறனாளிகள் விரும்புகின்றனர்.
ஆனால், வசிப்பிடங்களிலிருந்து
தொலைதூரம் சென்று தேர்தல் பணியாற்றவும், போக்குவரத்து
மற்றும் கட்டமைப்பு தடைகளை எதிர்கொண்டு செயலாற்றுவதிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு
பல சவால்கள் உள்ளன.
இந்த நிலையில், மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் சிலர் தேர்தல்
பணிகளில் மாற்றுத் திறனாளி ஊழியர்களும் கட்டாயம் ஈடுபட வேண்டும் என
வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன.
மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் செயல், நடைமுறை விதிகளுக்கு எதிராக உள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய ஆணையரகம்
கேட்டுக் கொண்டதன்படி, தேர்தல்
பணிகளில் மாற்றுத் திறனாளிகளை ஈடுபடுத்துவதை கூடியமட்டும் தவிர்க்க தலைமை தேர்தல்
ஆணையம், மாநில தலைமை
தேர்தல் அதிகாரிகளுக்கு கடந்த 1998-ஆம் ஆண்டே வழிகாட்டுதல்களை அறிவுறுத்தியுள்ளது.இருப்பினும், தேர்தல்
பணிகளில் மாற்றுத்திறனாளிகளும் கட்டாயம் ஈடுபட வேண்டும் என
வற்புறுத்தப்படுகின்றனர்.
தேர்தல் பணிகளில் ஈடுபட வற்புறுத்தும் மாவட்ட
தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்
குமார் பிறப்பிக்க வேண்டும் என நம்புராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...