கடினமான கேள்வி மற்றும் தவறான கேள்வியால், கணித தேர்வில், 'சென்டம்' சரியும் என, கணித ஆசிரியர் தெரிவித்தனர்.
கடந்த, 2012ல், பிளஸ் 2, கணித பாடத்தில், 2,656 மாணவர்கள், 200க்கு, 200
மதிப்பெண் பெற்றனர். இந்த எண்ணிக்கை, கடந்த, 2013ல், 2,352ஆக சரிந்தது.
இந்நிலையில், நேற்று நடந்த கணித தேர்வில், தவறான ஒரு கேள்வியுடன், 16
மதிப்பெண்ணுக்கான, இரு கேள்விகள், மிகவும் கடினமாக இருந்ததால், இந்த ஆண்டு, இந்த பாடத்தில், 'சென்டம்' சரியும் என,
கணித ஆசிரியர் தெரிவித்தனர். புதிய பாணியில் கேள்வி: சென்னையில் உள்ள, அரசு
மேல்நிலைப்பள்ளி ஒன்றின் கணித ஆசிரியர் கூறியதாவது: 'சென்டம்' எடுப்போம்
என்ற நம்பிக்கையுடன், தேர்வை எழுதிய சிறப்பான மாணவர்களுக்கு கூட, சில
மதிப்பெண் குறையலாம். 10 மதிப்பெண் பகுதியில், ஏழு கேள்விகளை, எண்கள்
வடிவில் கேட்கவில்லை. மாறாக, 'தியரி'யாக கேட்டு, அதில் இருந்து, எண்களை
கண்டுபிடிக்கும் வகையில், புதிய பாணியில், கேள்விகளை கேட்டுள்ளனர். இந்த
முறையில், விடை அளிப்பதற்கு, கூடுதல் நேரம் பிடிக்கும். இதனாலும்,
மாணவர்களால், சரிவர விடை எழுத முடியவில்லை. எனவே, 'சென்டம்' கண்டிப்பாக
சரியும். இவ்வாறு, அந்த ஆசிரியர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...