Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தகுதித் தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல், டி.ஆர்.பி அவசர கடிதம்

 
             தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரி ஆசிரியர் தேர்வு வாரியம் அவசர கடிதம் எழுதியிருக்கிறது. 

              கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வின் முடிவு ஜனவரியில் வெளியிடப் பட்டது.அதில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற 26 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.இந்த நிலையில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 5 சதவீதமாக குறைத்து கடந்த பிப்ரவரி 6-ம்தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது.இந்த 5 சதவீத மதிப்பெண் தளர்வு சலுகை காரணமாக கூடுதலாக 47 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றனர்.

தேர்தல் நடத்தை விதிகளால் சிக்கல்

                அவர்களில் முதல்கட்டமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மார்ச் 12-ம் தேதி முதல் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். அதைத்தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. முதல் தாளில்வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதமும் ஆன்லைனிலேயே வெளியிடப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம், புதன்கிழமை (6-ம் தேதி) வெளியிட்டது. இதையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

                   இதனால், தகுதித்தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர் களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தகுதித்தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான அறிவிப்பு நடத்தை விதி அமல்படுத்தப்படுவதற்கு முன்பே வெளியிடப்பட்டு விட்டதால், எஞ்சியுள்ளவர்களுக்கு தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த அனுமதி அளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நய்யார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாருக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி முடிவு தெரிவிப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தாலும் நடத்தை விதிகள்அமலில் இருக்கும் வரை, ஆசிரியர் பணிநியமன பணிகளை தொடரவோ, தேர்வுமுடிவை வெளியிடவோ இயலாது என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.




13 Comments:

  1. Kind request from all PG & TET candidates are TN Govt should take quick steps in the following issues:

    1. Publishing other subject PG results (if some writs pending in high court, trb should give news in press about what is the present position & what is the next step)

    2. Since govt changed its policy & relaxed 5% for tet 2013, Relaxation needed & extended up to TET 2012 & supplementary TET 2012. (Govt in quick announce this as most of the tet candidates awaits for it before tet cv.)

    3. TRB should give press news about the publication of final list of pg, tet & too too appointment time. This wil avoid unwanted pressure among candidates who r awaiting for a long time for appointment from tn govt.

    We expect trb & tn govt finish the pg & tet
    recruitment with satisfactory to all candidates those worked hard & longing for a long time.

    ReplyDelete
  2. what we do they are all played in our life only the tamil pgs are lucky persons

    ReplyDelete
  3. ellame sikkaltha trb ku ithumattuma

    ReplyDelete
  4. we will wait ,no other way

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. when will you announce the relaxation for 2012 candidates also. we are waiting for your announcement. please do not play our life.

    ReplyDelete
  7. siva kumar , plz try till the end

    ReplyDelete
  8. முதுகலை ஆசிரியர் நியமனத்தில் வழங்கப்படுவதுபோல் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க கோருதல

    முதுகலை ஆசிரியர் தேர்வில் வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு கௌரவம் அளிக்கும் வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு தேர்வுப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
    வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஒரு ஆண்டுக்குள் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது. 1 முதல் 3 ஆண்டுகள் வரை 1 மதிப்பெண்ணும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை 2 மதிப்பெண்ணும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3 மதிப்பெண்ணும் 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
    அதுபோல் 2013ல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 1 எழுதி வெற்றிபெற்ற தேர்வர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 2 எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும்
    அவர்களது வேலை வாய்ப்ப்க பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளித்து தேர்வுப் பட்டியல் தயார் செய்து வெளியிட்டு இதன் மூலம் ஆசிரியர் தகுதி்த் தேர்வில் தேர்ச்சி பெற்ற
    வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வில் ஒளி
    இதனால் அரசு வேலை கிடைக்கும் என
    நம்பியிருந்த வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ReplyDelete
  9. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஒரு ஆண்டுக்குள் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது. 1 முதல் 3 ஆண்டுகள் வரை 1 மதிப்பெண்ணும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை 2 மதிப்பெண்ணும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3 மதிப்பெண்ணும் 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
    அதுபோல் 2013ல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 1 எழுதி வெற்றிபெற்ற தேர்வர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 2 எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும்
    அவர்களது வேலை வாய்ப்ப்க பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளித்து தேர்வுப் பட்டியல் தயார் செய்து வெளியிட்டு இதன் மூலம் ஆசிரியர் தகுதி்த் தேர்வில் தேர்ச்சி பெற்ற
    வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வில் ஒளி
    இதனால் அரசு வேலை கிடைக்கும் என
    நம்பியிருந்த வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ReplyDelete
  10. Dear all,
    We can't expect anything from TRB and TN CM. Because they are planned very well. Now they are playing with our life. So don't wait for anything. As usual give your resumes to private schools and work as slaves. that would be an compact solution for all problems.

    ReplyDelete
  11. Yes Ranjith kumar... that is only good... i already began to give the resumes to various privater schools

    ReplyDelete
  12. give relaxation to 2012 candidates.
    so, 2013 relaxation candidates, 2012 relaxation candidates and now due to wrong answers and question some more marks may be added. so some more candidates may pass. So, over all 1 lakh candidates are expecting for job.

    If 2012 candidates got good weightage than previously passed candidates 2012 then there will be a great problem.

    So, give relaxation to 2012 but selection should be followed only based on tet marks. Otherwise some of the group of candidates file a case against this. They don't worry about others I heard this from some source. Any one this is true.

    ReplyDelete
  13. DEAR PG SELECTED CANDIDATES, WE ARE WAITING FOR FINAL SELECTION LIST AND COUNCELLING,BUT TRB SIMPLY REFUSED OUR FEELINGS,WE ARE HUMAN BEINGS,BUT TREATED LIKE A SLAVES,WE ARE GOING TO PUT OUR GOLDEN TIME IN WASTE WATER,TAKE IMMEDIATE ACTION OTHERWISH WE ARE WAITING UPTO JUNE .

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive