பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும்,
எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று பாரதியார் கூறினார். அதேபோல், தாய்
மொழியும் மிக உயர்ந்தது என்று சொல்லத் தேவையில்லை. தாய் மொழியில் படித்தால்
மட்டுமே இளம் வயதில் எந்த பாடமும் எளிதில் புரியும்., நோபல் பரிசு பெற்ற
விஞ்ஞானிகள் பலர், தாய்மொழியில்தான் தங்கள் கண்டுபிடிப்புகளை
வெளியிட்டுள்ளனர்.
சீனா, ஜப்பான் உட்பட பல
நாடுகளில் தாய் மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில்
மட்டும்தான், ஆங்கில மோகம் காரணமாக தாய் மொழி பின்னுக்கு
தள்ளப்பட்டுள்ளது. மக்களின் இந்த ஆங்கில மோகத்தால் கல்வி
வியாபாரமாகிவிட்டது.
முன்பு பள்ளிகள், கல்லூரிகள் தொடங்குவது சேவை
என்பது மாறி இன்று ஒரு பணம் கொழிக்கும் நல்ல தொழிலாகவே மாறிவிட்டது. இமயம்
முதல் குமரி வரை நாட்டின் எல்லா மாநிலங்களிலும் இந்த நிலைதான் உள்ளது.
குழந்தை பிறந்தவுடன், அதை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற கவலையை விட
பெற்றோருக்கு நல்ல நர்சரி பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற கவலைதான்
இப்போது அதிகமாக உள்ளது. மக்களின் இந்த ஆர்வத்தால் தனியார் பள்ளிகள்,
தங்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்
ஒருவருக்கு முதுகலை பட்டம் படிக்கும் வரை ஆன செலவு, இப்போது எல்கேஜியிலேயே
ஆவது மிகவும் கொடுமை. தனியார் பள்ளிகளில் கட்டணத்தை சீரமைக்க அரசு எடுத்த
முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது
புகார் கொடுக்க பெற்றோர் முன் வருவதில்லை. அப்படியே புகார் கொடுத்து,
ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளை எப்படி சமாளிப்பது என்பதை தனியார் பள்ளிகள்
நன்கு தெரிந்து வைத்து கொண்டுள்ளன. கல்யாணம் செய்து பார் வீட்டை கட்டி
பார்’ என்று தமிழில் சொல்வார்கள். அதாவது, இரண்டு விஷயங்களையும் செய்து
முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால், இப்போது, ‘பிள்ளைகளை
படிக்க வைத்து பார்’ என்றுதான் சொல்ல வேண்டும். கல்வியை வியாபாரமயமாக்க
கூடாது என்று ஒரு புறம் சொல்லி கொண்டே இருக்கின்றனர். ஆனால், ஆங்கில
மோகத்தை கைவிட்டு தாய்மொழியில் படிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டினால்
மட்டுமே இது சாத்தியமாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...