அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் நடந்த, ஆங்கில வார்த்தைகளை
எழுத்துக்கூட்டி உச்சரிக்கும் (ஸ்பெல்லிங்) போட்டியில்இந்திய வம்சாவளி
மாணவர் குஷ் ஷர்மா (13) வெற்றி பெற்றார்.
மிசௌரி மாநிலத்தின் ஜாக்ஸன் கவுன்டி ஸ்பெல்லிங் போட்டி, கான்சாஸ் நகர
மத்திய நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இறுதியாக குஷ் ஷர்மாவும்
ஷோபியா ஹாப்மேன் (11) என்ற மாணவியும் மோதினர்.
இருவரும் சளைக்காமல் பதில் அளித்து வந்ததால் இப்போட்டி இதுவரை இல்லாத
அளவு 29 சுற்றுகள் வரை நடந்தது. இறுதியில் definition என்ற வார்த்தையை
சரியாக எழுத்துக்கூட்டி உச்சரித்து குஷ் ஷர்மா வெற்றி வெற்றார். இதன் மூலம்
வாஷிங்டனில் மே மாதம் நடைபெறும் ஸ்கிரிப்ஸ் தேசிய ஸ்பெல்லிங் போட்டிக்கு
அவர் தகுதி பெற்றுள்ளார்.
இதற்கு முந்தைய சுற்று கடந்த பிப்ரவரி 22ம் தேதி நடந்தபோது, குஷ்
ஷர்மாவும் ஷோபியாவும் 66 சுற்றுகள் வரை மோதினர். ஒருகட்டத்தில்
அங்கீகரிக்கப்பட்ட வார்த்தைகள் கிடைக்காமல் நடுவர் களே திணறினர். பிறகு
அகராதி மூலம் நிலைமையை சமாளித்தனர். எனினும் போட்டி முடிவுக்கு வராததால்
மார்ச் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
குஷ் ஷர்மா 7-ம் வகுப்பும், ஷோபியா 5-ம் வகுப்பும் படிக் கின்றனர்.
அவர்கள் இப்போட்டியில் 260க்கும் மேற்பட்ட வார்த்தைகளை எழுத்துக்கூட்டி
உச்சரித்துள்ளனர். இதற்கு முன் நடைபெற்ற சுற்றுகளில் 23 மாணவர்களை இவர்கள்
போட்டியில் இருந்து விலகச் செய்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...