தமிழகத்தில் பொதுக் கல்வி வாரியம் கடந்த
2009ஆம் ஆண்டு கொண்டு வரப் பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும்
சமச்சீர் கல்வி முறை நடை முறைக்கு வந்துள்ளது. பின் னர் 2011இல் ஆட்சிக்கு
வந்த அதிமுக அரசு தொடக்க நடு நிலைப் பள்ளிகளில் முப் பருவ முறையை அறிமுகம்
செய்தது. இந்த ஆண்டு 9ஆம் வகுப்புக்கு முப்பருவ முறை நடைமுறைக்கு வந்தது.
அரசு ஏற்கெனவே அறி வித்தபடி வரும் கல்வி
ஆண்டில் 10ஆம் வகுப்புக் கும் முப்பருவ முறை நடை முறைக்கு வர வேண்டும். அதை
எதிர்பார்த்து பாட நூல் தயாரிக்கும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் பத்தாம் வகுப்புக்கான புதிய பாடப் புத்தகத்தை கடந்த மாதம்
வடி வமைத்தது. 5 பாடங்களும் ஒன்றாக இணைத்து 2 புத்தகங்களாக அச்சிடும்
வகையில் வடிவ மைக்கப்பட்டு அரசிடம் ஒப் படைக்கப்பட்டது.
ஆனால் பத்தாம் வகுப் புக்கு முப்பருவ முறை வரு
மா என்பது குறித்து இன்னும் அரசு முடிவு எடுக்காத நிலையில், பழைய பத்தாம்
வகுப்பு புத்தகங்களையே அச்சிட அரசு தெரிவித்துள் ளது. அதனால் வரும் கல்வி
ஆண்டில் பழைய படியே பத்தாம் வகுப்பு புத்தகங்கள் அச்சிடும் பணியை தமிழ்
நாடு பாடநூல் கழகம் தொ டங்கியுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ,
மாணவி யருக்கு இலவச பாடப் புத்தகங்கள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு
வருவதால், அடுத்த கல்வி ஆண்டுக்கான கால அவ காசம் 2 மாதங்கள் தான் உள்ளன.
அதற்குள் பாடப்புத்தகம் அச்சிட வேண்டும்
என்பதால் முதற்கட்டமாக 36 லட்சம் இலவசப் பாடப்புத்தகங் களை அச்சிடும்
பணியில் தமிழ்நாடு பாடநூல் கழகம் ஈடுபட்டுள்ளது. சில்லறை விற்பனைக் கான
புத்தகங்கள் பிறகு அச்சிடப்பட உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...