ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியின மாணவியர் விடுதிகளில், மாணவியர் பயன்பாடுக்கு,
"வாஷிங் மிஷின்' வாங்கும் திட்டம், பல மாதங்களாக கிடப்பில்
போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 1,902 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின
மாணவர் விடுதிகள் உள்ளன; இவற்றில், 92, மாணவியர் விடுதிகள்; அவற்றில்,
5,000 பேர் தங்கியுள்ளனர். "மாணவியரின் வசதிக்காக, 2
கோடி ரூபாய் மதிப்பீட்டில், 82 வாஷிங் மிஷின்கள் வாங்கப்படும்' என, தமிழக
பட்ஜெட்டில், கடந்த முறை அறிவிக்கப்பட்டது. அதிக துணிகளை துவைப்பதற்கு
வசதியாக, பொது மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளது போன்ற, வாஷிங்
மிஷின்களை, மாணவியர் விடுதிகளில் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அறிவிக்கப்பட்ட, அந்த வாஷிங் மிஷின்கள், ஒரே நேரத்தில், 50 துணிகளை
துவைக்கும் வசதி கொண்டது; ஒரு, வாஷிங் மிஷினின் மதிப்பு, ஐந்து லட்சம்
ரூபாய் என, கூறப்பட்டது. வாஷிங் மிஷின்களை, விடுதிகளில் பொருத்தினால்,
தங்களின் பிரச்னை, தீர்ந்து விடும் என, மாணவியர் நம்பினர்; ஆனால், இன்று
வரை, இத்திட்டத்தை நிறைவேற்றவில்லை.
இது குறித்து, அரசு அதிகாரிகள்
கூறியதாவது:இரண்டு மாதங்களுக்கு முன், அரசாணை வெளியிடப்பட்டது. இந்த
மாதத்தில், வாஷிங் மிஷின் கொள்முதல் செய்யும், ஒப்பந்த நிறுவனத்தை
தேர்ந்தெடுக்க, முடிவு செய்தோம். ஆனால், லோக்சபா தேர்தல் தேதி,
அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, தேர்தல் முடிந்த பின், ஒப்பந்த நிறுவனம்
தேர்ந்தெடுக்கப்பட்டு, பணிகள் துவங்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட
பின், தேர்தல் நடத்தை விதிமுறைகள அமலில் உள்ளதால், புதிய திட்டங்கள்
எதையும், மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற முடியாது. அவ்வாறு செய்தால்,
அது, தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகிவிடும். இது, தண்டனைக்குரிய குற்றம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...