மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் குறித்த
தேடுதல் விபரங்களை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது : மலேசிய விமானம் மாயமாகி 7 நாட்கள்
ஆகிறது; தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது; தேடுதல் குறித்த
விபரங்கள் வெளிப்படையாக வெளியிடப்படுகின்றன;
இந்த தேடுதல் பணியில் 14
நாடுகளும், 58 விமானங்களும், 43 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன;
அவர்களுக்கு எனது நன்றிகள்; விமானிகளில் ஒருவர் தான் விமானத்தை கடத்தி
செல்ல வாய்ப்பு உள்ளது; விமானம் கடத்தப்பட்டதற்கான காரணம் குறித்த விசாரணை
நடத்தப்பட்டு வருகிறது; 14 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அந்த விமானத்தில்
உள்ளனர்; 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் மாயமாகி
உள்ளது; ரேடாரின் முதல்கட்ட தேடுதல் அறிக்கையில், மலாக்காவிற்கு அருகே
விமானம் திரும்பி வந்து மாயமானது தெரிய வந்தது; பின்னர் அது அந்தமான் கடல்
பகுதிகளை நோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளது; அங்கிருந்து தாய்லாந்து கொண்டு
செல்லப்பட்டு பின்னர் கஜகிஸ்தானுக்கோ அல்லது இந்தோனேசியாவில் இருந்து
தெற்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கோ விமானம் கொண்டு செல்லப்பட்டு
இருக்கலாம். அனைத்து சாத்திய கூறுகளின் அடிப்படையில் விமானத்தை தேடும்
பணிகள் நடைபெற்று வருகிறது. மலேசிய மற்றும் வியட்னாம் படைகள் இணைந்து
தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்; சீன கப்பல்கள் 2 சீன கடல் பகுதியில்
தேடி வருகின்றன; விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது; விமானத்தின்
தொடர்பு கட்டுப்பாடு கிழக்கு கடற்கரை பகுதியை நெருங்கும் போது
அணைக்கப்பட்டுள்ளது; விமானம் கடத்தப்படுவதற்கு முன் செயற்கைகோள் தொடர்பும்,
விமான கட்டுப்பாட்டு தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது;
மாயமான விமானத்தில் இருக்கும் பயணிகளின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலை
தெரிவித்துக் கொள்கிறேன்; இது வரை நடத்தப்பட்ட அனைத்து புலனாய்வு
குழுக்களின் அறிக்கைகளின் அடிப்படையில் விமானம் கடத்தப்பட்டுள்ளதை
உறுதிப்படுத்தி உள்ளோம்; விமானத்தில் யாரோ ஒருவரால் அனைத்து தொடர்புகளும்
துண்டிக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது; விமானம் புறப்பட்ட 2
மணிநேரத்திலேயே அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது; தொடர்ந்து
மிகப் பெரிய அளவில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது; இந்த புதிய
தகவல்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கான முதல்படிகள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விமானம் கடத்தப்பட்டிருந்தால், விமானம் கடத்தப்பட்டு ஏழு நாட்களாகியும், எந்த ஒரு கோரிக்கையும், கடத்தல்காரர்கள் முன்வைக்காதது வியப்பாக இருக்கிறது.
ReplyDeleteBy God's grace they will be safe.
ReplyDeleteBy God's grace they will be safe.
ReplyDelete