பத்தாம் வகுப்பு விடைத்தாளுடன், வரைபடங்கள்,
வங்கி படிவம், ரயில்வே முன்பதிவு படிவம் ஆகியவை இணைத்து, தைக்கப்பட்டு
உள்ளன. கடந்த ஆண்டு வரை, பத்தாம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாளுடன்,
வரைபடங்கள் (மேப்), வங்கி படிவம் மற்றும் ரயில்வே முன்பதிவு படிவம் ஆகியவை,
தனித்தனியே வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு, தமிழ்
இரண்டாம் தாள் தேர்வில், ஐந்து மதிப்பெண்களுக்கான, வங்கி படிவம் வழங்காதது,
சர்ச்சையை ஏற்படுத்தியது. வங்கி படிவம் அச்சடிக்க, "ஆர்டர்' வழங்கி,
அச்சகத்தினர், அச்சடிக்க மறந்ததால், படிவம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது
என, அப்போது, தேர்வுத் துறை தெரிவித்தது. இதனால், மாணவர்கள், படிவத்தை,
அப்படியே வரைந்து, உரிய விவரங்களை பூர்த்தி செய்தனர். படிவத்தை வரையாத
மாணவர்களுக்கும், ஐந்து மதிப்பெண் சுளையாக வழங்கப்பட்டது.
இதுபோன்ற குளறுபடி, இந்த ஆண்டு வரக்கூடாது
என்பதற்காக, தேர்வுத் துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,
விடைத்தாளுடன், மேற்கண்ட படிவங்களை இணைத்து, ஒட்டு மொத்த விடைத்தாளும்
தைக்கப்பட்டு உள்ளன. இதனால், படிவங்கள், "மிஸ்சிங்' என்ற கேள்வியே எழாது.
ஒன்பது லட்சம் விடைத்தாளிலும், படிவங்களை இணைத்து தைத்துள்ளதாக, தேர்வுத்
துறை வட்டாரம் தெரிவித்தது. அதேபோல், சமூக அறிவியல் விடைத்தாளில், "மேப்'
இணைத்து, அச்சிடப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...