லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள மின்வசதி, கட்டட வசதி உள்ளிட்டவற்றை, வீடியோவில் பதிவு செய்யும் பணியை, தேர்தல் ஆணையம் மேற்கொண்டுஉள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி, தென்சென்னையில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள
அடிப்படை வசதிகளை, தேர்தல் நடப்பதற்கு முன், வீடியோவில் பதிவு செய்து
சமர்ப்பிக்க, அந்தந்த வட்டார அளவிலான தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல்
ஆணையம்உத்தரவிட்டுள்ளது.இதை தொடர்ந்து, சோழிங்கநல்லூர் சட்ட சபை தொகுதிக்கு
உட்பட்ட, துரைப்பாக்கத்தில் உள்ள ஓட்டுச் சாவடிகளில், மின்வசதி,
கட்டடத்தின் தன்மை, அறைகளின் தன்மையை வருவாய்துறை ஊழியர்கள், நேற்று,
வீடியோவில் பதிவு செய்தனர்.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், "ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்படும் கட்டடங்கள், கான்கிரீட் கட்டடங்களா என்பதை, வீடியோ மூலம் பதிவு செய்கிறோம். மேலும், மின் இணைப்பு வசதியையும் வீடியோவில் பதிவு செய்து தேர்தல் ஆணையத்திடம் வழங்க உள்ளோம்' என்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...