Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாயா மான மலேசிய விமானம்: விமானத்தின் பாதை கம்யூட்டரில் மாற்றி அமைத்து கடத்தல்

         கோலாலம்பூரில்  இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இச்சம்பவம் நடந்து இன்றுடன்12  நாட்கள் ஆகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, வியட்நாம் உள்பட 26 நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆனால்  எந்த வித தகவலும் இதுவரை தெரியவில்லை.இருந்தும் அது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த விமானம் விபத்தில் சிக்கியதா?
 
           தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதா? அல்லது நாசவேலையால் சிதைக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளது. தறபோது விமானத்தை தேடும் ம்தூரம் அதிகரிக்கபட்டு உள்ளது.

விமான பைலட்கள் மீது சந்தேகம்

விமானத்தை ஓட்டி சென்ற தலைமை பைலட் ஜாகாரி  அகமது ஷா வீட்டில் மலேசிய போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.மலேசிய போலீசார் தலைமை பைலட்டின் குட்ம்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  அகமது ஷா  மன நிலை எவ்வாறு இருந்து என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். இது ஒரு வாடிக்கையான விசாரணைதான் அவரை குற்றவாளியாக கருதி விசாரணை நடத்த வில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் உதவி பைலட் பாரூக் அப்துல் அமீது வீட்டிலும் மலேசிய போலீசார்  சோதனை நடத்தினர். அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோதனையில் விமானிகள் தான் விமானத்தை கடத்தி இருக்ககூடும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.மாயமான விமானம் எம் எச் 370  கடத்தலுக்கு மிகவும் அபாயகரமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.விமானம் காணாமல் போனதை தொடரந்து விமானிகளின் மனைவி மற்றும் குழந்தைகள்  வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

பைலட்டின கடைசி பேச்சு

மலேசிய போலீசார் தலைமை பைலட் ஜாகாரி  அகமது ஷா மற்றும் உதவி பைலட் பாரூக்  ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து சோதனைகள் முடிந்து அவர்கள் விமானத்தில் ஏறும் அனித்து சிசிடிவி வீடியோ காட்சிகளையும் பார்த்து தடயங்கள் ஏதாவது கிடைக்கிறதா என் பார்த்து வருகின்றனர்.

விமானத்தில் உள்ள வீடியோ காட்சியில் விமானிகள் இருவரும் சோதனை செய்யபட்டு நடந்து வருவது தெரிகிறது.

இதற்கிடையே விமானம் தனது கட்டுப்பாட்டில் இருந்து விலகுவதற்கு சிறிது நேரத் துக்கு முன்பு விமானி மலேசிய விமான கட்டுப் பாட்டு அறையுடன் பேசிய விவரம் வெளியாகி உள் ளது.

விமானி  அறையில் இருந்து உதவி பைலட் பாரூக் அனைத் தும் சரியாக உள்ளது. இரவு வணக்கம்(ஆல் ரைட், குட்நைட்) என பேசி யுள்ளார். அதன் பிறகு தான் கட்டுப்பாட்டு அறை யுடனான விமானத்தின்  தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

உதவி விமானியின் கடைசி வார்த்தைகளுக்கு 12 நிமிடங்கள் முன்பாக அதாவது, அதிகாலை 1.07 மணியளவில் விமானத்தின் தானியங்கி தகவல் பரிமாற்ற கருவி செயல்பட்டுள்ளது.  ஒவ்வொரு நிமிடங்களுக்கும் தகவலை தெரிவிக்கும் இந்த கருவி எப்பொழுது அணைக்கப்பட்டது என்பது குறித்து சரியாக தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  விமானி மற்றும உதவி விமானி வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில், கடந்த வார இறுதியில், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமான இயக்கும் கருவி ஒன்று கேப்டன் ஷாவின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது.  அதனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்த தகவல் எதனையும் வெளியிட முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

காணாமல் போன மலேசிய விமானத்தை இயக்கிய விமானியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 5 வேறுபட்ட நாடுகளின் ஓடுதளங்களில் விமானத்தை இயக்குவதற்கான சாப்ட்வேர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேசிய காவல்துறையினர் நடத்திய சோதனையில், இந்தியா, இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளில் உள்ள விமான நிலையங்களின் ஓடு தளங்களில் விமானத்தை இயக்குவதற்கான தனித்தனி சாப்ட்வேர்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனால், விமானத்தை திட்டமிட்டி விமானி கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

தலிபான்கள் மறுப்பு

புதிய தகவலின் படி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இரு நாடுகளில்தான் விமானம் தரையிறங்கி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் எல்லைபகுதி மற்றும்  வடமேற்கு பாகிஸ்தான் நிலப்பகுதிகளில் விமானம் இறக்கப்பட்டு இருக்கலாம் என  சில தனியார் அமைப்புகள் தெரிவித்து உள்ளன.

தலீபான்கள் விமானத்தை கடத்தி இருக்கலாம் என்ற கருத்துக்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலிபான்களின் பிரதிநிதி சபிஹுல்லா முஜித் தெரிவிக்கையில் அது ஒரு வெளிநாட்டு பிரச்சினை அது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என கூறினார்.

ஐநா. தகவல்

காணாமல் போன மலேசிய விமானம் எங்கேயாவது மோதியோ, நடுவானில் வெடித்துச் சிதறியோ விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என ஐ.நா. ஆதரவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மலேசியாவுக்கு உதவுவதற்காக இன்சாட் செயற்கைக்கோள் நிபுணர்கள் கோலாலம்பூருக்கு வந்துள்ளனர். அவர்கள் தவிர அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள் உதவியையும் மலேசியா கோரியுள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. அதிகாரிகளும் கோலாலம்பூரில் முகாமிட்டுள்ளனர்.

விமான பாதை கம்யூட்டர் மூலம் மாற்றி அமைப்பு

விமானத்தின் பாதை  கம்யூட்டர் மூலம்  மாற்றி அமைக்கபட்டு உள்ளது.மாயமான விமானம் கோலாலம்பூர் முதல் பீஜிங் வரை செல்லவேண்டும் என  விமான பாதை  விமான கம்யூட்டரில் பதிவு செய்து வைக்கபட்டு இருக்கும். ஆனால் திட்டமிட்டு விமானபாதை கம்யூட்டரில் பாதையை மாற்றி அமைத்து உள்லனர் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive