Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்தியாவில் ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலை - நம் கனவு நனவாகுமா?

 
           நம்மால் ஒரு உயர்கல்வி நிறுவனத்தை உருவாக்க சுமார் ரூ.20 ஆயிரம் கோடியைத் திரட்ட முடிந்தால், உலகத்தரம் வாய்ந்த ஒரு பல்கலைக்கழகத்தை இந்தியாவில் உருவாக்குவதைப் பற்றி திட்டமிட முடியும் மற்றும் அதன் வெற்றியையும் உறுதிசெய்ய முடியும்.

          ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலையை இந்தியாவில் அமைப்பது எப்படி சாத்தியம் என்பது குறித்து சமீபத்திய பாரத ரத்னா விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவிடம் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

சர்வதேச தரவரிசைப் பட்டியலில் ஒரு இந்தியக் கல்வி நிறுவனத்தின் பெயராவது முதல் 10 இடங்களில் வந்துவிட வேண்டும் என்பது ஏராளமான இந்தியர்களின் விருப்பமாக உள்ளது. சர்வதேச தரவரிசை பட்டியலில் ஒரு இந்தியப் பல்கலை இடம்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அலசலாம்.

இந்தியாவின் நிலை

ஒவ்வொரு ஆண்டும், உலகின் 3 முக்கிய தரவரிசை பட்டியல்களான QS, THE, and ARWU ஆகிய வெளியாகும்போதும், முதல் வரிசைகளில் இந்திய கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் என்பது நமக்குப் பழகிப்போன ஒன்று. ஆனால், இந்தாண்டு THE சர்வேயில், ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, புதிய வரவாக இந்தியாவின் பஞ்சாப் பல்கலை இடம் பெற்றுள்ளது. வழக்கமான ஐ.ஐ.டி., ஜவஹர்லால் நேரு பல்கலை மற்றும் டில்லி பல்கலை ஆகிய பழகிப்போன பெயர்களுக்கு மத்தியில், இது ஒரு புதிய வரவு.

நமக்குத் தெரிய வேண்டியது...

உலகளவிலான தரப் பட்டியல்களில் முதல் வரிசையில் வரும் கல்வி நிறுவனங்கள் அந்த நிலையை அடைவதற்கு காரணம் என்ன? மற்றும் இந்தியப் பல்கலைகள், அவைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் யாவை என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

ஒரு பல்கலைக்கழகம் உலகத்தரமானது என்று அறியப்படுவதற்கு தேவையான பொருள் அடிப்படையிலான விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. உலகத் தரத்திலானது என்று அறியப்பட விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு இங்கு பஞ்சமில்லை. பிரபல பத்திரிக்கை உலகில், IIT -கள், உலகத் தரமுள்ளவை என்றே தொடர்ந்து அறியப்பட்டு வருகின்றன.

உலகத் தரத்திலான பல்கலைகளை அமைக்க வேண்டுமெனில், அதிகமான முதலீடு வேண்டும் என்று கூறுவோர் ஒருபுறம் என்றால், வேறு சிலரின் கருத்து மாறுபட்டுள்ளது. அதாவது, ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலையை, வெறும் பணத்தை மட்டுமே கொண்டு, எடுத்த எடுப்பிலேயே உருவாக்கிவிட முடியாது மற்றும் அதுதொடர்பாக ஏராளமான வழிகாட்டுதல்கள் உள்ளன என்பதுதான் அது.

தொடர்ச்சியான காலகட்டங்களில் உருவாக்கி வளர்க்கப்பட்ட தரமான சிந்தனை, பணத்தைவிட முக்கியமானது என்பது இந்த தரப்பாரின் வாதம்.

ஒரு உலகத்தரமான பல்கலையின் உருவாக்கம்...

முதலீடு

மிகச் சிறந்த உயர்கல்வி நிறுவனத்தை உருவாக்க அதிகமான முதலீடு வேண்டும் என்பதை மறுக்க இயலாது. அதுதான் முதல் அடிப்படை. குறைந்தபட்ச வருடாந்திர செலவாக ரூ.3,000 முதல் ரூ.4,000 கோடிகள் வரை ஆகும்.

சிறந்த மாணவர்கள்

உலகத்தரமான பல்கலைகளில், நல்ல திறன்வாய்ந்த பெரிய மாணவர் வட்டங்கள் கட்டாயம் இருக்கும்.

திறன்வாய்ந்த ஆசிரியர்கள்

நோபல் பரிசு, கள மெடல்கள்(field medals) மற்றும் அகடமி பெல்லோஷிப் ஆகியவற்றைப் பெற்ற சிறந்த ஆசிரியர்களை, உலகத்தரம் வாய்ந்த பல்கலைகள் கொண்டிருக்கும்.

பிரமாதமான உள்கட்டமைப்பு

உலகத்தரம் வாய்ந்த ஒரு பல்கலைக்கு, அற்புதமான உள்கட்டமைப்பு என்பது ஜீவாதாரமான அம்சம். அதுவின்றி எதையும் செய்ய முடியாது.

நிர்வாகம்

உலகளவில் சிறந்த 100 பட்டியலில் வரும் சுமார் 70% பல்கலைகள், தன்னாட்சி அதிகாரம் பெற்றவை. மேலும், அவற்றில் 95% கல்வி நிறுவனங்கள், நிர்வாகம் மற்றும் கல்வி தொடர்பான அம்சங்களில், மிகவும் குறைந்தளவிலான அரசியல் தலையீடு மட்டுமே உள்ளவை.

பல்வகைப்பட்ட மாணவர்கள்

உலகத்தரம் வாய்ந்த பல்கலைகள், தம்மிடம், கணிசமான அளவில், பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களைக் கொண்டவை.

அகடமிக் புரடக்டிவிடி

முதன்மையான பல்கலைகள், அதிகளவில் வெளியீடுகளை(heavy publishing) செய்கின்றன மற்றும் அவர்களுடைய ஆசிரியர்களின் செயல்திறன் சுமார் 3.1 என்ற அளவில் உள்ளது.

தொழில்துறை இணைந்த ஆராய்ச்சி

உலகத்தர பல்கலைகள், அறிவு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அவைகளின் ஆய்வகங்கள் தொழில் துறையுடன் இணைந்து செயலாற்றுகின்றன.

உற்சாக பழைய மாணவர் அமைப்பு

பெரும்பாலான முதல்தர பல்கலைகள், முன்னாள் மாணவர்களுடைய ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை தொடர்வதற்கு முதலீடு செய்கின்றன.

அனைத்துவித மேம்பாடு

விளையாட்டு, இலக்கியம், கவின்கலை உள்ளிட்ட பல்வேறான, படிப்புத் தவிர்த்த திறன்சார் அம்சங்களுக்கு முதல்தர பல்கலைகள் எப்போதுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன.

அதிக தூரம்?

உலகத்தரம் வாய்ந்த பல்கலை என்ற நிலையை நாம் அடைய வேண்டுமெனில், ஒவ்வொரு அம்சத்திலும், அத்தகைய பல்கலைகளால் பின்பற்றப்படும் பயிற்சி உள்ளிட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தியக் கல்வி நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்தவை என்ற நிலையை அடைய இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது.

மேலும், எப்படியேனும் ஒரு இந்தியப் பல்கலையாவது உலகின் தரநிலைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்துவிட வேண்டும் என்பதில் நமது ஆர்வம் என்றும் அணையாமல் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

அதேசமயம், அந்த கல்வி நிறுவனம், சமூகத்தில் சில குறிப்பிட்ட பின்னணியைக் கொண்ட மக்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரக்கூடியதாய் இருக்க வேண்டும் என்பதும் நமது விருப்பமாக இருக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive