உடலையும் மனதையும் துடைத்துவிட்டாற்போல் பளிச்சென்று வைத்துக்கொள்வதற்குப் பயன்படுவது யோகக் கலை.
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?' என்பார்கள். இந்த உண்மை தெரிந்ததனால்தானோ என்னவோ, நான்கு வயதிலேயே வளையத்தொடங்கிவிட்டார் பிரணவ்! சென்னை, முகப்பேரைச் சேர்ந்தவர் பிரணவ். இவருடைய பெயர் இந்தியாவின் பலமாநிலங்களிலும் ஹாங்காங் போன்ற அயல்நாடுகளிலும் பரவியிருக்கின்றது. காரணம், இவரிடம்பரிபூரணமாக கைவசமாகியிருக்கும் யோகக் கலைதான்.எளிய ஆசனங்களில் தொடங்கி படிப்படியாக கடினமான தனுராசனம், மயூராசனம், மச்சாசனம் போன்றஆசனங்ளைச் செய்வதற்கும் தன்னை தயார்படுத்திக் கொண்டார்.
கடந்த 2007-இல் நடந்தநான்காவது மாநில யோகா சாம்பியன்ஷிப் போட்டியில்தான் அபிநவ் முதலில் பங்கெடுத்தார். பங்கெடுத்த முதல் போட்டியிலேயே இரண்டாம் பரிசை வென்றார். அன்றைக்குத்தொடங்கியது பிரணவின் யோகா பயணம்! மாவட்டங்களுக்கான போட்டி, மாநிலங்களுக்கான தேசிய அளவிலான போட்டிகள், சர்வதேசஅளவிலான போட்டிகள் என இதுவரை 150க்கும் மேற்பட்ட யோகாசனப் போட்டிகளில்பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார் பிரணவ்.
யோகாசனங்களினால் கிடைக்கும் பயன்கள்குறித்து பிரணவ், அளித்த பேட்டியில் இருந்து.. ""எங்களின்குடும்பமே யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள குடும்பம். என்னுடைய அப்பா அண்ணாதுரை,அம்மா கலைவாணி, அக்கா யோகாஞ்சலி என அனைவருமே காலையில் எழுந்ததுமே யோகா பயிற்சியில் ஈடுபடுவோம். வீட்டிலேயே 35-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு என்னுடைய பெற்றோர்யோகா வகுப்புகளை எடுக்கின்றனர். அதனால் யோகா என்னுடைய அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக சிறுவயதிலிருந்தே மாறிவிட்டது. யோகா போட்டிகள் நடக்கும் இடங்களுக்கு குடும்பத்துடனேயே போவோம். மாவட்ட, மாநிலஅளவில் நான் சந்தித்த போட்டிகளைவிட ஹாங்காங்கில் சமீபத்தில் நான் பங்கேற்ற போட்டி மிகவும்கடினமானதாக இருந்தது.
பொதுவாக ஃபார்வேட் பென்ட், பேக்வேர்ட் பென்ட், ட்விஸ்டிங், பேலன்ஸிங் போன்ற முறைகளில்தான் யோகாசனம் செய்யச் சொல்வார்கள். ஆனால் சர்வதேச அளவில் நடந்த இந்தப்போட்டியில் இன்வெர்ஷன் என்று சொல்லப்படும் கடினமான ஒரு யோகப் பயிற்சி முறையையும்செய்யச் சொன்னார்கள். அதிலும் நான் சிறப்பாக செய்ததால்தான் எனக்கு விருதுடன், 150 டாலர்கள் பணமுடிப்பும் பரிசாகக் கிடைத்தது. வீர அனுமபட்சி மோத்தானாசனம், விருட்சிக ஆசனம், கந்தாசனம், ஊர்த்துவகுக்குட்டாசனம், விபரீதநடராஜ தண்டாசனம், ஏகபாதவாமதேவ சிரசாசனம் ஆகிய ஆசனங்களை இந்தப் போட்டியின் போது நான்செய்து காட்டினேன்.
ஹாங்காங்கிற்கு குழந்தைகள், பெற்றோர்கள் என 36-பேர் ஒரே குடும்பமாகசென்றுவந்தது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. போட்டியில் பங்கேற்ற 15 குழந்தைகளில்பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் வெவ்வேறு பிரிவுகளில் பரிசுகளைப் பெற்றனர். ஆசனா ஆண்டியப்பனின் யோகா பள்ளியின் கிளை ஹாங்காங்கிலும் உள்ளது. அங்கு எங்களுடைய யோகா நிகழ்ச்சிகளை நடத்தினோம். அங்கிருக்கும் நிர்வாகிகளும் மாணவர்களும்எங்களை பாராட்டியதோடு, விருந்து அளித்து உபசரித்தது, எங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது.
யோகா செய்ய உகந்த நேரம் எது?
யோகா செய்வதற்கு ஏற்ற நேரம் காலை ஆறுமணிதான். மாலையிலும் செய்யலாம். யோகப் பயிற்சி செய்யும்போது, வயிறு காலியாக இருக்கவேண்டும். உடல் ஆரோக்கியத்துக்கு ஐந்து ஆசனங்களை தினமும் செய்தாலே போதும். அவை, பத்மாசனம் (மனஒருமைப்பாடு, நினைவாற்றல்),
தனுராசனம் (செரிமானத்தைத் தூண்டும், மலச்சிக்கல் இருக்காது), புஜங்காசனம் (முதுகுத் தண்டுவடத்திற்கு வளையும் தன்மையைக் கொடுக்கும்), பட்சி மோசாசனம்(சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்), மச்சி ஆசனம் (சுவாசக் கோளாறுகளைச் சரிசெய்யும்).
இந்த ஆசனங்களை தகுந்த பயிற்சியாளரிடம் கற்றுக் கொண்டு நாள்தோறும் செய்தாலே போதும்குடும்பத்தில் ஆரோக்கியம் பெருகும்…" என்றான் மழலை மொழியில் பிரணவ்!
I am Aruna. Naan oru mathiruku munnal Isha Yoga payintan.
ReplyDeletemunbu naan TET exam ku prepare pannum pothu thalaiyil
oru bharam vaithathu pol thontum. exam question paper ra
parthathum nadukum varum. therintha questionku kooda
yennal pathil elutha mudiyathu.naan yoga payirchi petta
piraku niraya matangal unarukiran. thalai bharam kurainthu
vittathu. memory power increase ahahi ullathu.
I am Aruna. Naan oru mathiruku munnal Isha Yoga payintan.
ReplyDeletemunbu naan TET exam ku prepare pannum pothu thalaiyil
oru bharam vaithathu pol thontum. exam question paper ra
parthathum nadukum varum. therintha questionku kooda
yennal pathil elutha mudiyathu.naan yoga payirchi petta
piraku niraya matangal unarukiran. thalai bharam kurainthu
vittathu. memory power increase ahahi ullathu.
Hi Aruna madam good morning.am Sathya.nanum TET PAPER 1 & 2 pass panniruken.almost 1 year ah job resign pannittu padisiruken.so over stress ah erukku.yoga panna best nu ninaisen.already ISHA foundation pathi kettu erukken.but full details therinsika asa paduren.so pls call or msg me in dis no-8939158607.pls contact me.
Delete