படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த, விருப்பமான ஒரு பெயர், ஆயிஷா
இரா.நடராசன். இவரின் ஆயிஷா எனும் குறுநாவல், மிகவும் புகழ்பெற்றது.
அறிவியலை நேசிக்கும் சின்னப் பெண் பற்றிய உருக்கமான கதை. அதனாலேயே, இவரின்
பெயரின் முன்னால் ஆயிஷா ஒட்டிக்கொண்டாள்.
தொடர்ந்து சிறுவர்களுக்கான நூல்களை எழுதிவரும் ஆயிஷா நடராசனின் புதிய
நூலான, 'இது யாருடைய வகுப்பறை?’ கல்வி பற்றி ஆழமான கருத்துகளை
முன்வைக்கிறது.
மாணவர்கள், கல்வி கற்பதை ஏன் தண்டனையாக நினைக்கிறார்கள் என்பதைக்
காரணங்களோடு சொல்வதோடு, அதை எப்படிச் சரிசெய்வது என்பதையும் எளிமையாக
எழுதியிருக்கிறார்
வி.எஸ்.சரவணன்,
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்
'கற்றல் என்றால் என்ன?’ 'கற்றல் எவ்வாறு நிகழ்கிறது?’ போன்ற அவருடைய
கேள்விகளும், அதற்கான பதில்களும் ஒவ்வொரு மாணவரும் பெற்றோரும் அவசியம்
படிக்க வேண்டியவை. 'கற்றல் என்பது, மனித நடத்தையின் அடிப்படை. நாம் பேசும்
மொழி, நமது பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மனப்பான்மை, லட்சியம், கொள்கை,
ஆளுமை குணங்கள், புலன்காட்சி ஆகிய அனைத்திலும் கற்றல் முக்கியப் பங்கு
வகிக்கிறது’ என்கிறார்.
'ஒரு மாணவர், கல்வி கற்பதில் பின்தங்கினால், ஆசிரியரை மட்டும் குறை சொல்வது
சரியல்ல. கல்விமுறைகளையும் கவனிக்க வேண்டும்’ என்று கல்விமுறையின்
எதிர்காலத்துக்கு அக்கறையுடன் எடுத்துரைக்கிறார். அயல் நாட்டுக்
கல்விமுறைகள் எப்படிச் சிறப்பாக இருக்கின்றன என்பதைப் பற்றியும் இந்த
நூலில் அறிய முடிகிறது.
மாணவர்களை ஒருபோதும் குறைவாக மதிப்பிடக் கூடாது என்று சொல்லி, அவர்களின்
உளவியல் பற்றிச் சொல்லியிருக்கும் பகுதிகள் மிக முக்கியமானவை. ஆசிரியரும்
மாணவர்களும் இணைந்து வகுப்பறையை இனிமையாக்க முடியும் என்பதை அழகாகக்
கற்பிக்கிறது இந்த நூல். வாசிப்பவர் எளிமையாகப் புரிந்துகொள்ளும் விதமாக,
கல்விச் சிந்தனையாளர் பாவ்லோ பிரைரேயின் வங்கிமுறை வகுப்பறை, குழு
வகுப்பறை, பிரச்னை வகுப்பறை, வல்லுநர் உரையாடல் வகுப்பறை போன்றவற்றைப் படம்
போட்டு விளக்கி இருப்பது சிறப்பு.மகிழ்ச்சிக்கான குழந்தைகள் தர வரிசையில் இந்தியாவுக்கு 116-வது இடம் என்று
முன்னுரையில் ச.மாடசாமி கூறுகிறார். இந்த நிலை மாற வேண்டுமானால்,
பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் உறவு புரிதலோடு இன்னும் மேம்பட வேண்டும். அதற்கு
இந்த மாதிரியான நூல்களே வழிகாட்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...