"தொகுப்பூதிய காலத்தையும், பணி வரன்முறை செய்து வழங்க வேண்டும்' என, பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி சார்பில், ஐந்து புதிய ஒன்றியக் கிளைகள் துவக்க
விழா, நாமக்கல்லில், நேற்று நடந்தது.
விழாவுக்கு, மாவட்டத் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலாளர் நடேசன்
வரவேற்றார். மாநிலத் தலைவர் காமராஜ், "ஆசிரியர் காவலன்' என்ற இதழை வெளியிட்டு பேசினார்.
பொதுச்செயலாளர் ஈசுவரன், எருமப்பட்டி, திருச்செங்கோடு, ராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல் ஆகிய ஐந்து புதிய ஒன்றியக்
கிளைகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், தமிழக பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த
தொகுப்பூதியக் காலத்துக்கும் சேர்த்து, காலமுறை ஊதியம்
வழங்க வேண்டும். தொகுப்பூதிய காலத்தையும் பணிவரன் முறை செய்து வழங்க வேண்டும்.
தமிழக தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை பெறும்போது தரஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
நடுநிலைப் பள்ளிகளில், வரலாறு மற்றும் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க
வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் அனைத்து வகையான
ஆசிரியர்களுக்கும், பொதுமாறுதல்களுக்கு முன்பும், கல்வி ஆண்டின் இடையிலும் முறைகேடாக மாறுதல் வழங்கக் கூடாது.
பள்ளி விடுமுறை நாட்களில் நடக்கும் பயிற்சி நாட்களுக்கு ஈடுசெய்ய சிறப்பு தற்செயல்விடுப்பு வழங்க வேண்டும். ஜனவரி, 2014 முதலான அகவிலைப்படி உயர்வு, பத்து சதவீதத்தை உடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...