தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.தமிழகத்தில் செயல்படும், கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும், அந்தந்த பகுதிபல்கலைகளின் கீழ் இருந்தன. கடந்த, சிலஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை உருவாக்கப்பட்டது. இந்தபல்கலையில், தற்போது வரை, துணை வேந்தரே, கல்வி, ஆட்சிமன்றம் மற்றும் நிதிக்குழுவின்பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், அப்பல்கலையின், கல்விக்குழுவிற்கான உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உள்ளார்.
இதன்படி, ஆசிரியர் தொழில் அறிவியல் துறை பேராசிரியர்கணேசன், மதிப்பு கல்வித் துறை பேராசிரியர் சவுந்தர்ராஜன், கல்வி உளவியல் துறை பேராசிரியர் கோவிந்தன்,கல்வி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன், பாடத்திட்ட திட்டமிடல் மற்றும் மதிப்பிடல்துறை பேராசிரியர் பாலகிஷ்ணன் ஆகியோர், நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், ஐவரும்,மூன்றாண்டுகளுக்கு, இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...